Skip to main content

ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் இவர்களில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசி யார்?- கட்சிக்குள் கடும் விவாதம்!

Published on 23/12/2019 | Edited on 23/12/2019

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கும் பூர்வீகத் தொடர்பு உண்டு. ஏனென்றால், அவருடைய தந்தை ஓட்டக்காரத்தேவர் பிறந்தது ஸ்ரீவில்லிபுத்தூரில்தான். ஓ.பி.எஸ். குடும்பத்தினர் வணங்கும் வனபேச்சியம்மன் கோவில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பில்தான் உள்ளது. அந்த வகையில் அவருடைய சொந்தபந்தங்கள் நிறையபேர் ஸ்ரீவில்லிபுத்தூரில்தான் வசிக்கிறார்கள். அதனால், அந்தப் பகுதியில் எப்போதுமே ஓ.பன்னீர்செல்வத்தை விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள்.  

TAMILNADU FORMER CM Jayalalithaa OF true believer WHO THE PERSONS EPS AND OPS


 

உள்ளாட்சி தேர்தல்கள ரவுண்ட்- அப்பில். ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தைக் நாம் கடந்தபோது, ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் அங்கு அடிபட்டது.‘ஜெயலலிதா மீது உண்மையிலேயே பற்றும் பாசமும் விசுவாசமும் வைத்திருப்பவர் ஓ.பன்னீர்செல்வமா? எடப்பாடி பழனிசாமியா?’என்று அக்கட்சியினர் இருவர்,  தங்களுக்குள் பட்டிமன்றமே நடத்தினார்கள். 
 

TAMILNADU FORMER CM Jayalalithaa OF true believer WHO THE PERSONS EPS AND OPS


 

அவர்கள் பேசிக்கொண்ட சமாச்சாரம் இதுதான்- 2016 டிசம்பர் 5- ஆம் தேதி ஜெயலலிதா அமரரானார். அவர் இறந்தது கார்த்திகை பஞ்சமி திதியில். இந்த ஆண்டு அந்தத் திதி டிசம்பர் 1- ஆம் தேதி வந்தது. உயிருடன் இருக்கும் வரையிலும் ஒருவரது பிறந்த நட்சத்திரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்வர். இறந்த பின்னரோ, அதைத் திதி என்பார்கள். வருடம்தோறும் அந்தத் திதியைக் கணக்கிட்டு திவசம் கொடுப்பார்கள். அதைச் செய்தால், இறந்தவரது ஆன்மாவின் அங்கமான 16 அம்சங்களும் சொர்க்கத்தை அடையுமாம். இதை இறந்தவரது உறவினர்கள்தான் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.



 ரத்த சம்பந்தமுள்ள உறவினர்கள் யாரும் ஜெயலலிதாவுக்காக, வருடம்தோறும் திதியைக் கணக்கிட்டு திவசம் கொடுக்காத நிலையில், ஜெயலலிதாவைப் போலவே, சாஸ்திர சம்பிரதாயங்களில் பெரிதும் நம்பிக்கை கொண்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், அந்தக் காரியத்தை ஒவ்வொரு ஆண்டும் செய்து வருகிறார். ஜெயலலிதா, அய்யங்கார் வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அந்த வகுப்பினருக்கு மட்டுமே இதுபோன்ற காரியங்களைச் செய்துவரும் மடம் ஒன்றில் திதியன்று திவசம் கொடுத்து வருகிறார். 2017 மற்றும் 2018 ஆகிய இரு ஆண்டுகளில் தானே முன்னின்று திவசம் கொடுத்து வந்த அவர், கடந்த 1- ஆம் தேதி தனது மகன் பிரதீப்பை அனுப்பினார். அதனாலோ என்னவோ, திதி கொடுத்த தகவல்‘லீக்’ ஆகிவிட்டது. 
 


ரத்த சம்பந்தம் இல்லையென்றாலும், அந்த ஸ்தானத்தில் இருந்து,  பித்ரு ஆகிவிட்ட ஜெயலலிதாவை மகிழ்வித்து, அவரது ஆன்மாவின் பரிபூரண ஆசியைப் பெறுபவராக இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இன்னொரு காரியமும் அவர் செய்திருக்கிறார். ஒருநாள் இரவில் மெரினா கடற்கரையை அவருடைய கார் கடந்து செல்லும்போது, அலங்கரிக்கப்பட்ட கலைஞர் சமாதி, ஒளி வெள்ளத்தில் மிதப்பதையும், அங்கே கூட்டம் கூட்டமாக, பலரும் மரியாதை செய்ததையும் கண்டிருக்கிறார். 

TAMILNADU FORMER CM Jayalalithaa OF true believer WHO THE PERSONS EPS AND OPS


அதே நேரத்தில், அதற்கடுத்துள்ள ஜெயலலிதா சமாதியிலோ இருள் மண்டிக் கிடந்திருக்கிறது. மறுநாளே தன் மகன் பிரதீப்பை அனுப்பி பார்த்து வரச்செய்தார். என்றைக்கோ அலங்கரித்த பூக்களெல்லாம் ஜெயலலிதா சமாதியில் வாடிப்போய்க் கிடந்ததை மகன் விவரிக்க,‘என்னதான் அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தாலும், இப்படியா அக்கறை கொள்ளாமல் விட்டுவிடுவது?’என புலம்பியிருக்கிறார். தர்மயுத்தம் நடத்திய இடம் அல்லவா? உடனே முடிவெடுத்து, ஒருவரை அழைத்து‘ஒவ்வொரு நாளும் வெவ்வேறு டிசைனில் அதிகாலை 4 மணிக்கெல்லாம் ஜெயலலிதா சமாதியை மலர்களால் அலங்கரிக்க வேண்டும். இருள் சூழவிடாமல் எந்நேரமும் வெளிச்சம் பாய்ச்ச வேண்டும்’என்று கனகச்சிதமாக ஏற்பாடுகளை செய்தார். இதற்காக, மாதம் ஒன்றுக்கு ரூ,1,80,000 என ரேட் பேசி, மலர் அலங்காரத்தை தொடரச் செய்திருக்கிறார்.

 
இப்போது சொல்லுங்கள்! ஜெயலலிதா மீது உண்மையிலேயே விசுவாசம் கொண்டவர் யாரென்று? -இப்படித்தான் அவ்விருவரும் பேசிக்கொண்டார்கள்.  அப்படியே, தங்களைத் தேர்ந்தெடுத்த தமிழக மக்கள் மீதும் விசுவாசம் காட்டி, ஊழலற்ற நல்லாட்சி புரிந்தால், மிக நன்றாகத்தான் இருக்கும்.  


 

சார்ந்த செய்திகள்