tamilnadu deputy cm opaneerselvam tweets

Advertisment

அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்திய அரசியல் வரலாற்றில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. ஆட்சி. தாய்த்திருநாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் உலக அரங்கில் பெரும் அவமானத்தையும், அரசுக்கு மாபெரும் இழப்பையும் தேடித் தந்த 2G இமாலய அலைக்கற்றை ஊழல், வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், கூவம் நதி ஊழல் என எண்ணிலடங்கா ஊழல்களை விஞ்ஞான ரீதியில் புரிந்த தி.மு.க. ஊழலின் ஊற்றுக்கண் என்பது உலகம் அறிந்த ஒன்று.

tamilnadu deputy cm opaneerselvam tweets

பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத விரக்தியில் தி.மு.க.வின் ஊழல்களை மக்கள் மறந்திருப்பர் என பகல் கனவு கண்டுகொண்டிருக்கிறார் ஸ்டாலின். ஊழலால் புரையோடிப்போன தி.மு.க.வின் கரைபடிந்த ஆட்சியை அகற்றத்தான் தமிழக மக்கள் எங்களோடு கைகோர்த்து உங்களை வீட்டிற்கு அனுப்பினர் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். ஊழலும் தி.மு.க.வும் வேறு வேறு அல்ல என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். இரட்டை இலை மீண்டும் மீண்டும் துளிர்ப்பதை தீயசக்திகளால் தடுக்க முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.