Skip to main content

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் கண்டன ஆர்ப்பாட்டம். (படங்கள்)

Published on 26/08/2019 | Edited on 26/08/2019

 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி  அமைச்சருமான ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட சிலர் மீது, சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 20- ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் 21-ஆம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்தனர். 
 

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை தொடந்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்துவருகிறது. இன்று (26.08.2019) சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கே.ஜெயக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் கலந்துகொண்டு கண்டன் உரையாற்றினர்.  
 

சார்ந்த செய்திகள்

Next Story

"கடைசியில் ஒரே கட்சி ஒரே தலைவர் என்பதில் போய் முடியும்" - ப. சிதம்பரம் விளாசல்

Published on 16/06/2023 | Edited on 16/06/2023

 

former union minister chidambaram says one party one leader and condemn bjp 

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் கலைஞர் 100 நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக 'உழைப்பு தந்த உயிர்ப்பு; ஒன்றியம் கண்ட வியப்பு' என்ற தலைப்பின் கீழ் பொதுக்கூட்டம், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் வில்லிவாக்கம் கிழக்கு பகுதி அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகில் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எம்.பி,  சி.பி.எம் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் கே. பாலபாரதி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

 

இந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசுகையில், "எந்த துறையாக இருந்தாலும் முதல் வரிசையில் கலைஞர் இருப்பார். அத்தகைய சிறப்பு வாய்ந்த மாமனிதருடைய நூற்றாண்டு விழாவை இந்த ஆண்டு முழுவதும் கொண்டாட உள்ளோம். இந்திய அரசியல் சாசனத்தைப் படித்தவர்கள் இந்தியாவை இந்திய யூனியன் என்று சொன்னார்கள். மத்திய அரசுக்கு மாநில அரசு குறைந்த அரசு அல்ல. அதுமட்டுமின்றி சளைத்த அரசும் அல்ல.

 

குறிப்பாக பாஜக கட்சி ஆளாத மாநிலங்களோடு அவர்கள் மோதிக் கொண்டே இருந்தால் அந்த மாநிலத்தின் திட்டங்களை எப்படி செயல்படுத்த முடியும். மாநிலத்தின் உரிமைகள் மறுக்கப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு கடந்த 9 ஆண்டுகளாக தென் மாநிலங்கள் அதிகமாக வஞ்சிக்கப்படுகின்றன. மாநிலங்களை மோடி மதிப்பது கிடையாது. மாநில உரிமைகளையும் மதிப்பது இல்லை.  ஒரே நாடு ஒரே மொழி என பாஜகவினர் சொல்வது கடைசியில் ஒரே கட்சி ஒரே தலைவர் நரேந்திர மோடி என்பதில் போய் முடியும். இன்னும் 300 நாட்களில் நாடாளுமன்றத் தேர்தல் வரும். அதற்குப் பிறகும் இந்த நிலைமை நீடிக்க வேண்டுமா இல்லையா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்" எனப் பேசினார். 

 

 

Next Story

“விமர்சனம் செய்தால் காவல்துறை நடவடிக்கை வேண்டுமா?” - ப.சிதம்பரம்

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

P. Chidambaram commented on BJP's tolerance

 

“விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்சியின் ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்” என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பாஜகவை விமர்சனம் செய்துள்ளார். 

 

ஒடிஷா ரயில் விபத்து மற்றும் சிபிஐ விசாரணை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். அக்கடிதத்தில் 4% மட்டுமே கவாச் இயந்திரம் பொருத்தப்பட்டிருப்பது ஏன்? காலிப் பணியிடங்களை 9 ஆண்டுகளாக நிரப்பாதது ஏன்? என்பன போன்ற 11 கேள்விகளை எழுப்பி இருந்தார். இதற்கு பாஜகவின் முக்கியத் தலைவர்களான சதானந்த கவுடா, தேஜஸ்வி சூர்யா, பி.சி.மோகன் போன்றோர் பதில் கடிதம் அனுப்பினர். அதில் வாட்ஸாப் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பியது உங்களைப் போன்ற தலைவருக்கு பொருத்தமானது இல்லை எனக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

 

இது குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “கார்கேவின் கடிதத்திற்கு பாஜக எம்.பி.க்களின் பதில் பாஜகவின் சகிப்புத்தன்மையின்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு. எதிர்க்கட்சித் தலைவராக உள்ள கார்கேவிற்கு பிரதமருக்கு கடிதம் எழுத உரிமை உண்டு. அந்த கடிதத்திற்கு பிரதமர் மோடி பதில் அளிப்பார் என மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் பதில் சொல்லக்கூட தகுதியற்றவராக பிரதமர் உள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட சிஏஜி அறிக்கைகள் கார்கேவின் விமர்சனத்தை உறுதிப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இவர்களால் விமர்சனத்தையே பொறுத்துக்கொள்ள முடியாது. நேற்று தமிழகத்தை சேர்ந்த பாஜக தலைவர் ஒருவர், “பிரதமரை விமர்சிப்பவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை” என பேசியிருந்தார். விமர்சனம் செய்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமா? விமர்சனத்தையே சகித்துக் கொள்ள முடியாத ஒரு கட்சியின் ஆட்சியை இப்போது தான் பார்க்கிறேன்” எனக் கூறினார்.