காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் இந்திய ஒற்றுமை பயணத்தின் தொடர்ச்சியாக "அரசியலமைப்பை பாதுகாப்போம்" மற்றும் "கையோடு கை கோர்ப்போம்" என்ற பரப்புரை பிரச்சாரத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னெடுக்க உள்ளனர். இந்நிலையில், அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்திபவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.