Advertisment

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் 56 ஆவது நினைவு தினம் நேற்று (27.05.2020) அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் அலுவலகங்களில் நேரு உருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்டிருந்த நேரு உருவப்படத்திற்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமையில் கங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.