கிரிக்கெட் ஸ்டேடியம் வாடகையில் திடீர் அக்கறை காட்டும் எடப்பாடி... அதிர வைக்கும் காரணம்!

தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கும், அரசுக்குச் சொந்தமான சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்துக்கும் இடையிலான வாடகை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி திடீர் அக்கறை காட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. தமிழக அரசுக்குச் சொந்தமான இடத்தில்தான் ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ளது. இடத்திற்கான வாடகைத் தொகையான ஏறத்தாழ 2,500 கோடி ரூபாயைக் கொடுக்காமல் நிலுவையில் வைத்துள்ளது தமிழக கிரிக்கெட் சங்கம்.

admk

இது தீராப் பிரச்சினையாக இருந்து வந்த நிலையில், முதல்வர் எடப்பாடியின் நெருங்கிய நண்பரும் சேலம் கிரிக்கெட் சங்க பிரமுகருமான ராமசாமி என்பவர், வாடகைத் தொகையைக் குறைத்து நிர்ணயிக்க வேண்டும் என்று கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் முதல்வர் எடப்பாடியை ’வெயிட்டாகவே’ அணுகியிருக்கார் என்று சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து அந்த வாடகையை குறைக்க மூவர் குழு ஒன்றை தமிழக அரசு அமைத்திருக்கிறது என்று சொல்கின்றனர்.

admk cricket eps issues Stadium
இதையும் படியுங்கள்
Subscribe