Skip to main content

இடைத்தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் வெளியீடு...

Published on 21/10/2019 | Edited on 21/10/2019

தமிழகத்தின் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளிலும், புதுச்சேரியின் காமராஜ் நகர் தொகுதியிலும் இன்று இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.

 

tamilnadu byelection polling percentage

 

 

இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைந்தது. இதில் விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும் நாங்குநேரி தொகுதியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. அதேபோல புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மொத்தமாக 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது.  தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாங்குநேரி படுகொலை; செய்தி வெளியிட்ட நிருபர் மீது வெடிகுண்டு வீச்சு

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

beaten on journalist who reported on Nanguneri incident

 

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி நகரின் மெயின் சாலையில் தாலுகா அலுவலகம் அருகே கிருஷ்ணா கம்ப்யூட்டர்ஸ் மற்றும் ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர் வானமாமலை. இவர், அரசியல் கட்சியின் சேனல் ஒன்றின் நாங்குநேரிப் பகுதி நிருபராகவும் பணிபுரிந்து வருபவர்.

 

இன்று காலை (நவ-21) 9 மணியளவில் வழக்கம் போல் கடையைத் திறந்திருக்கிறார். அதுசமயம் திடீரென பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் தன் கைப்பையில் மறைத்து வைத்திருந்த உருண்டை போன்ற ஒரு பொருளை வீசியிருக்கிறார். கடையினுள்ளே விழுந்த அந்தப் பொருள் வெடிக்கவில்லை. தொடர்ந்து அடுத்ததாக ஒன்றை வீச அது கடைமுகப்பின் முன்னே உள்ளே போர்டில் தெரித்து டமார் என வெடித்திருக்கிறது. சப்தம் கேட்ட நிருபர் வானமாமலை பதற்றத்தில் வெளியே வர, வீசிய வாலிபர் தன்கையிலிருந்த கைப்பையை வீசிவிட்டுத் தப்பியிருக்கிறார். அதை நிருபர் வானமாமலை பார்த்த போதுதான் உள்ளேயிருப்பது வெடிக்காத குண்டு, கடையில் வீசியது வெடிகுண்டு என்பதும் தெரிய வந்திருக்கிறது.

 

நிருபர் கடையில் வீசப்பட்ட வெடிகுண்டு சப்தம் அக்கம் பக்கம் பதற்றத்தை ஏற்படுத்த, வானமாமலையின் தகவலால் ஸ்பாட்டுக்கு வந்த நாங்குநேரி இன்ஸ்பெக்டர் ஆதம் அலியின் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தவர்கள். வெடிக்காத குண்டை கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துவிட்டு ஆய்வு செய்வதற்காக வெடிகுண்டு தடுப்பு பிரிவிற்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

 

கடந்த ஆகஸ்ட்டின் போது நாங்குநேரியின் பள்ளி மாணவனை வீடு புகுந்து சகமாணவர்கள் வெட்டிய விவகாரம் அதிர்வையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. அதுசமயம் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் உள்ளூர் நடப்புகளை செய்தியாக வெளியிட்டிருக்கிறார் நிருபர் வானமாமலை. அது தொடர்பான மோட்டிவ் தான் அவரைக் குறிவைத்து வீசப்பட்ட வெடிகுண்டு வீச்சு சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என்ற தகவலும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.

 

beaten on journalist who reported on Nanguneri incident

 

பதற்றத்திலிருந்த நிருபர் வானமாமலையைத் தொடர்புகொண்டு பேசும் போது, வழக்கமாக நான் காலை 9 மணிக்கு சற்று முன்பாக கடையைத் திறந்த சில நிமிடங்களில் பைக்கில் வந்தவன் ஒரு குண்டை கடைக்குள் வீசிய போது அது வெடிக்கவில்லை. என்னைக் குறிவைத்துத்தான் வீசியிருக்கிறான். நான் விலகிவிட்டதால் கடைக்குள் உள்ள பொருள் மீது பட்டு தெரித்திருக்கிறது. அடுத்தசில நொடிகளில் நான் எதிர்பாராத நேரத்தில் தொடர்ந்து அடுத்த குண்டை வீசினான், அது கடையின் போர்டில் பட்டு பலத்த சப்தத்துடன் வெடித்து சேதத்தை ஏற்படுத்தியது. பீதியில் நான் சுதாரித்து வெளியே ஓடிவந்த போது என்னைப் பார்த்தவன் பையைப் போட்டு விட்டு தப்பிவிட்டான். அவனை எனக்கு நன்றாக அடையாளம் தெரியும். பள்ளி ஒன்றில் படிப்பவன் என்றவர், பள்ளி மாணவன் அவனது சகோதரி வெட்டப்பட்ட போது நான் நிகழ்வுகளை செய்தியாக வெளியிட்டதால், அப்போதே அந்தக் கும்பல் என்னை மிரட்டியது. அதுகுறித்து நான் போலீசில் புகாரும் செய்துள்ளேன். புகைந்து கொண்டிருக்கும் அந்தப் பகைமை தான் வெடிகுண்டு வீச்சுக்குக் காரணம். என்கிறார் வானமாமலை.

 

இதுகுறித்து நாம் இன்ஸ்பெக்டர் ஆதம் அலியைத் தொடர்புகொண்டு பேசிய போது வெடிகுண்டு வீச்சு தொடர்பாக 12ம் வகுப்பு மாணவன் ஒருவனை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். பிறகே காரணம் தெரியவரும் என்கிறார். 

 

 

 

Next Story

“சமத்துவ சமுதாயம் அமைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

Let's work together to build an egalitarian society says Minister Udayanidhi Stalin

 

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை சக மாணவர்களால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவர்கள் ஆறு பேர் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மேலும், இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு இதுகுறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மாணவரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது சபாநாயகர் அப்பாவு, அமைச்சர் தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமுக வலைத்தள பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில், சாதிய நச்சால் ஏற்பட்ட தாக்குதலில் பாதிப்புக்குள்ளான பள்ளி சிறுவன் மற்றும் சிறுமிக்கு அரசு சார்பில் உடனடி சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ததோடு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர் சிகிச்சையின் பயனாக குணமடைந்துள்ள அந்த சிறார்களையும், அவர்களது குடும்பத்தாரையும் நெல்லையில் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினோம். அவர்களுக்கு சிறப்பாக மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்களை பாராட்டினோம்.

 

மேலும், அந்த சிறாரின் குடும்பத்தாருக்கு, அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் வீடு வழங்குவதற்கான ஒதுக்கீட்டு ஆணையை அளித்தோம். அச்சிறாரை நெல்லையில் உள்ள பள்ளியில் சேர்ப்பதற்கான மாறுதல் ஆணையையும், அவர்களின் தாயாருக்கு நெல்லையில் உள்ள சத்துணவு மையத்தில் பணிபுரிவதற்கான பணி மாறுதல் ஆணையையும் வழங்கினோம். அவர்களின் குடும்பத்துக்கு திமுக அரசு என்றும் துணை நிற்கும். சாதிய ஏற்றத்தாழ்வு - ஆதிக்கம் ஒழித்து சமத்துவ சமுதாயம் அமைக்க ஒன்றிணைந்து பாடுபடுவோம்” என தெரிவித்துள்ளார்.