Advertisment

பாஜகவின் முப்பெரும் விழா பேரணி..! கலந்துகொண்ட கவுதமி கலங்கடித்த மழைநீர்..! (படங்கள்)

Advertisment

இந்தியாவின் இரும்புமனிதரான சர்தார் வல்லபாய் படேலின் 144வது பிறந்த தினம் நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அந்தவகையில் தமிழக பாஜக சார்பில் படேலின் பிறந்தநாள் விழா, பிரதமர் மோடிக்கு பாராட்டு விழா, மற்றும் காந்தி சங்கல்ப யாத்திரையின் நிறைவு விழா என மூன்று விழாக்களை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டது. சென்னை, அமைந்தகரை பகுதியில் நடைபெற்ற இந்த விழாவில் மத்திய நிதிதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மற்றும் நடிகை கவுதமி ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் ஷெனாய் நகர் வழியாக பேரணியாக சென்று விழாமேடையை அடைந்தனர். மேடையில் வைக்கப்பட்டிருந்த படேல் மற்றும் காந்தி உருவ படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

சென்னையில் பெய்துவரும் கனமழையால் சாலைகளில் அதிகளவு மழைநீர் தேங்கியிருந்ததும், நிர்மாலா சீதாராமன் வருகைக்காக அவசர அவசரமாக சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளபட்டதும் குறிப்பிடதக்கது. எனினும் சாலையின் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்ததால் பேரணியில் கலந்துகொண்டவர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

Nirmala Sitharaman
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe