தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பின் தமிழக பாஜக தலைவர் பதவி நிரப்பப்படாமல் உள்ளது. இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் யார் என நாளை அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

tamilnadu bjp president name will be announced tomorrow

புதுச்சேரி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கான பாஜக தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கான பாஜக தலைவர் நாளை அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதற்கான கருத்துகேட்பு கூட்டங்களும், ஆலோசனைகளும் முடிவடைந்ததாக கூறப்படும் நிலையில், தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.