Advertisment

தமிழிசை வெளியிட்ட அதிரடி லிஸ்ட்...எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கழட்டி விட்ட பாஜக! 

இந்தியா முழுவதும் பாஜக கட்சி வளர்ச்சி அடைந்து இருந்தாலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில கூட வெற்றி பெறவில்லை. மேலும் அதிமுக, பாஜக கூட்டணி தமிழகத்தில் ஒரு இடத்தில மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த அனைத்து மாவட்டதிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தினர். தேர்தல் முடிவுக்கு பிறகு ஊடக விவாதங்களில் பங்கேற்க தமிழக பாஜகவினருக்கு கட்டுப்பாடு விதித்து இருந்தனர். அப்போது தமிழிசை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

Advertisment

bjp

அதில் தொலைக்காட்சியில் நடக்கும் அரசியல் விவாதங்களில் பாஜகவிற்கு சமநிலையும், சமவாய்ப்பும் கொடுக்கப்படுவதில்லை. அதனால் பாஜக பிரதிநிதிகள் யாரும் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஊடக விவாதகங்களில் பாஜக சார்பாக பங்கேற்போரின் பட்டியலை தமிழக பாஜக தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ளார். அதாவது பாஜக மாநில பொதுச் செயலாளர் கே.எஸ். நரேந்திரன் ஊடக விவாதங்களில் கலந்து கொள்வோருக்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு, ஊடக விவாதங்களில் பங்கேற்போரின் பட்டியலையும் வெளியிட்டுள்ளனர். அதில், வானதி சீனிவாசன், நைனார் நாகேந்திரன், கே.டி. ராகவன், ஸ்ரீனிவாசன், எஸ்.ஆர். சேகர் உட்பட 27 பேர் கே.எஸ். நரேந்திரனால் ஒருங்கிணைக்கப்பட்டு விவாதங்களில் கலந்து கொள்வார்கள் என தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் கருத்துகள் மட்டுமே கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்துக்களாக ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த லிஸ்டில் நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்படத்தக்கது.

Advertisment
news list Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe