
தமிழ்நாடுபாஜக தலைவராக இருந்த எல். முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றிருக்கும் நிலையில், தமிழ்நாடு பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து விவாதங்கள் எழுந்தன. இந்நிலையில் நேற்று (08.07.2021) பாஜகவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டார். ஏற்கனவே அவர் தமிழ்நாடுபாஜகவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாஜகசித்தாந்தத்தை வீடுகள்தோறும் எடுத்துச் செல்வோம் என தற்போதைய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ''பாஜகவின் சித்தாந்தத்தைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும்வரை ஓயமாட்டோம். நாம் ஒரு அணியாக ஒன்றிணைந்து நம்பிக்கையைப் போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்'' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)