Advertisment

சட்டமன்றத்திற்கு வராத கட்சித் தலைவர்கள், மாஸ்க் அணிந்துவந்த உறுப்பினர்!!!

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் சட்டமன்ற கூட்டம் இது. இன்று மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் நடைபெற்றது.

Advertisment

tamilnadu assembly

இன்றைய நாள் கூட்டத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ம.ஜ.க. தலைவர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், கொ.ம.தே.க. தலைவர் தனியரசு ஆகியோர் கலந்துகொள்ளவில்லை.

Advertisment

அதே நேரத்தில் சிறுநீரக கோளாறு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் முகத்தில் மாஸ்க் அணிந்து வந்தார். இதேபோல் இன்னொரு சம்பவமும் நிகழ்ந்தது. அண்மையில் திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். இன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் அமர்ந்துள்ள இடத்தில் இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

இரங்கல் கூட்டம் முடிந்தபின்பு, சட்டமன்றம் ஒத்திவைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

admk ammk congress Tamilnadu assembly
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe