tamilnadu assembly election 2021 dmk party

Advertisment

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் கடந்த பிப்ரவரி 17- ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைமைத் தொடங்கிய நிலையில், இன்று (28/02/2021) மாலை 05.00 மணிக்கு விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது. இதுவரை 8,388 விண்ணப்பங்களை அக்கட்சித் தலைமை விநியோகித்த நிலையில் 7,967 பேர் விண்ணப்பங்களைப் பூர்த்திச் செய்து அளித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மார்ச் 2- ஆம் தேதி முதல் மார்ச் 6- ஆம் தேதி வரை மாவட்ட வாரியாக, நடைபெறும் என தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.