Advertisment

தேர்தல் வெற்றிக்கு தெய்வம் துணை நிற்கும்!- ஓ.பி.எஸ். நம்பிக்கை!

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சிறப்பு பூஜைகள் நடத்தினார். தெய்வ பக்தி அதிகம் உள்ளவர் ஓ.பி.எஸ். தனது குலதெய்வம் குடிகொண்டிருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர்- செண்பகத்தோப்பில் உள்ள கோவிலில் வேண்டுதலை முன்வைத்து வழிபடுவது அவரது வழக்கம்.இன்று அவர், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகிலுள்ள ஓடைப்பட்டி ஸ்ரீவன்னி விநாயகர் திருக்கோவிலில் மனம் உருக சாமி தரிசனம் செய்தார்.

Advertisment

tamilnadu assembly by election nellai nanguneri deputy cm ops visit temple

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீ வன்னிவிநாயகர் திருக்கோவிலில் அவர், சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவே இந்த சிறப்பு பூஜையும், பிராத்தனையும் என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில். வன்னி விநாயகர் திருக்கோயில் சார்பாக துணை முதல்வருக்கு கும்ப மரியாதை செய்தனர். தமிழகத்தில் இது போன்ற பல கோவில்களிலும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு பிராத்தனை மேற்கொள்ளப் போவதாக அக்கட்சியினர் பரவசத்துடன் தெரிவித்தனர்.

Advertisment
temple deputy cm o paneer selvam nellai By election assembly Vikravandi nanguneri Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe