tamilnadu and puducherry assembly election congress leaders

Advertisment

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலையொட்டி, காங்கிரஸ் சார்பில் பார்வையாளர்கள் குழுவை நியமித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மத்தியப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய் சிங் தலைமையில் 2 உறுப்பினர்கள் உட்பட7 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், கே.ஆர்.ராமசாமி, புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வி.நாராயணசாமி, புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் உள்ளிட்டோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்" இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.