Advertisment

இதுவரை எத்தனை தமிழர்கள் ஆளுநர் பொறுப்பு வகித்துள்ளார்கள்... தமிழிசை எத்தனையாவது நபர்..?

தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த தமிழிசை, தெலங்கானா மாநில ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று உத்தவிட்டார். அக்கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்து, பாஜக தென்சென்னை மாவட்ட மருத்துவ அணிச் செயலாளராக வளர்ந்தார். இதையடுத்து படிப்படியாக மாநில பொதுச் செயலாளர், மாநில துணைத் தலைவர், தேசியச் செயலாளர் என வளர்ந்து, மாநிலத் தலைவர் என்ற நிலையை அடைந்தார். அவருக்கு ஓய்வு அளிக்கும் வகையில், தெலங்கானா மாநிலத்தில் ஆளுநராக அமர வைக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் பல்வேறு சிறப்புகளை தமிழிசை பெற்றுள்ளார்.

Advertisment

fg

தமிழக பாஜக தலைவராக இருந்து, ஒரு மாநிலத்தின் ஆளுநராக உயர்ந்த முதல் பெண். தெலங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநர் ஒரு மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்படும் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டாவது பெண் என்ற சிறப்பை தமிழிசை பெற்றுள்ளார். தமிழகத்தை சேர்ந்த 8 பேர், இதற்கு முன்பு ஆளுநராக பிற மாநிலங்களில் பணியாற்றியுள்ளார்கள். இவர்களின்பட்டியல் வருமாறு,

Advertisment

சதாசிவம் (கேரளா)

பா. ராமசந்திரன் (கேரளா)

சண்முகநாதன் (மேகாலயா)

சி.சுப்பிரமணியன் (மஹாராஷ்டிரா)

எம்.எம். ராஜேந்திரன் (ஒடிசா)

ஏ. பத்மநாபன் (மிசோரம்)

இஎஸ்எல் நரசிம்மன் (தெலங்கானா)

ஜோதி வெங்கடாச்சலம் (கேரளா)

tamilisai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe