Advertisment

ஊழல்வாதி ஒருவரை தோற்கடிக்கவே தூத்துக்குடியில் போட்டி : தமிழிசை சவுந்தரராஜன் 

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் ராஜம்மாள் நகரில் பா.ஜனதா சார்பில் ‘சொந்தமுடன் ஓர் இனிய சந்திப்பு’ என்ற நிகழ்ச்சி நடந்தது.பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

Advertisment

Tamilisai Soundararajan

ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள புதியம்புத்தூர் ராஜம்மாள் நகரில் பா.ஜனதா சார்பில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு, புதியம்புத்தூர் பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

அப்போது, தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ஊழல்வாதி ஒருவரை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக தான் கட்சி என்னை இங்கு போட்டியிட அனுப்பியது. கனிமொழி ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக, தனது டுவிட்டர் பக்கத்தில் இருந்த பெரியார் படத்தை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக பனை மரத்தை வைத்து உள்ளார். அவர் தூத்துக்குடி மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைத்துவிட்டார். இந்த மண் ஆன்மிக மண். அவர்களை ஏற்றுக்கொள்ளாது.

Advertisment

மத்தியில் தாமரை மலர்ந்தே தீரும். மு.க.ஸ்டாலின் கனவு ஒருபோதும் நிறைவேறாது. குடும்பம் குடும்பமாக கொள்ளை அடிக்க வருவார்கள். தூத்துக்குடியை கொள்ளை அடிக்க வருவார்கள். மக்கள் எழுச்சியுடள் இருக்க வேண்டும் என்றார்.

Ottapidaram Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Subscribe