திமுகவிடம் தனது கட்சியை முழுமையாக அடகு வைத்துவிட்டார் தினகரன் என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
டெல்லி, வாரணாசி போன்ற இடங்களில் பிரச்சாரத்திற்கு செல்கிறோம். எல்லா இடங்களிலும் பாஜகவுக்கு நல்ல சூழ்நிலை நிலவுகிறது. பாஜக கடந்த முறை பெற்றதைவிட அதிக இடங்களை பெறும் என்பதுதான் கள நிலவரம். ஆகையால்தான் ராகுல்காந்தி போன்றவர்கள் நாகரிகமற்ற முறையில் பிரச்சாரத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார்கள்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
இன்றைய காலக்கட்டத்தில் ஊழக்கு எதிரானவர்கள் யார்? ஆதரவானவர்கள் யார்? என்பதற்கான போட்டி நடைபெறுகிறது. காங்கிரஸ் நிச்சமாக ஊழலுக்கு ஆதரவானவர்கள்தான் என்பதை மோடி தெளிவாக சொல்லிக்கொண்டிருக்கிறார்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
திமுகவும், தினகரனும் மறைமுக கூட்டணி இல்லை என்று சொன்னாலும், இன்றைக்கு தமிழக அரசியலில் இணைந்துதான் செயல்படுகிறார்கள். அவர்கள் என்னதான் மறைமுகமாக இணைந்து செயல்பட்டாலும் பாஜக - அதிமுக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் சூழ்நிலை இருக்கிறது. திமுகவிடம் தனது கட்சியை முழுமையாக அடகு வைத்துவிட்டார் தினகரன். பாஜகவும், அதிமுகவுக்கும் தெளிவாக ஒரு கூட்டணி எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ, அப்படி நடந்து கொண்டிருக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.