தங்க.தமிழ்செல்வன் திமுகவில் இணைந்ததுபற்றி தமிழிசையின் கருத்து...

நேற்று அமமுகவின் கொள்கைபரப்புச் செயலாளராக இருந்த தங்க. தமிழ்செல்வன் திமுகவில் இணைந்தார். இதுகுறித்து பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ள ட்வீட்...

tamilisai savunthararajan

தங்கதமிழ்செல்வன் திமுகவில் சேர்ந்தார்...செய்தி......நேற்றைய ஹீரோ- இன்று ஜீரோ-நாளை யாரோ? அதிமுகவை பாஜக இயக்குவதால் திமுகவில் சேர்ந்தாராம்? ஸ்டாலின் ஆளுமை அழைத்ததாம்? அதிமுகவில் மீண்டும் சேர அங்கே எதிர்ப்பு அனுமதி கிடைக்கவில்லை என்பதே ஊரறிந்த உண்மை. இதில் எங்கே பாஜக இயக்குகிறது?

அற்ற குளத்தின் அறுநீர் பறவைபோல் உற்றுழித்தீர்வார் உறவல்லவர்!ஆட்சி மாற்றம்வரும்! வரும்!என தினமும் ஆரூடம் சொல்லிய திமுகவுக்கு கிடைத்தது உழைக்க வந்த தங்கமா?பிழைக்க வந்த பித்தளையா? என்பதை காலம் உணர்த்தும்.

ammk Tamilisai Soundararajan thanga tamilselvan
இதையும் படியுங்கள்
Subscribe