Advertisment

நேற்று திரிபுரா...நாளை தமிழகம் - என்ன சொல்ல வருகிறார் தமிழிசை..?

பாஜக தமிழக தலைவர் தமிழிசை நேற்று டுவிட்டரில் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். அதில், " ஒரு குழுவாக வேலை செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதற்கு திரிபுராவின் வெற்றிக் கதையே மிகப் பெரிய சாட்சி. பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, நட்டா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவோம்" என்று குறியுள்ளார். மேலும் புள்ளி விவரம் ஒன்றையும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisment

tamilisai

அதில் திரிபுராவில் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 6111 இடங்களில் பாஜக 5916 இடங்களை வென்றுள்ளதாகவும், 419 பஞ்சாயத்து சமிதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 411 இடங்களில் வென்றுள்ளதாகவும்,. ஜில்லா பரிஷத் தேர்தலில் மொத்தம் உள்ள 116 இடங்களில் 114 இடங்களை பாஜக வெற்றிபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை போன்றே தமிழகத்திலும் நடக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். தமிழிசை தெரிவித்துள்ள அனுமானம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisment
Tamilisai Soundararajan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe