Advertisment

தமிழக உளவுத் துறை அதிகாரிகளுக்கு முதல்வர் பதக்கம்! 

தமிழக உளவுத்துறையில் உள்நாட்டு பாதுகாப்பில் மிகச் சிறப்பாகவும், துணிச்சலாகவும் புலனாய்வு பணிகளை செய்ததற்காக உளவுத்துறையின் உள்நாட்டு பாதுகாப்பு பிரிவின் ஐ.ஜி.யான டாக்டர் கண்ணன் ஐ.பி.எஸ். தலைமையிலான டீமிற்கு, தமிழக முதல்வரின் துணிச்சல் விருது வழங்க முடிவு செய்து அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

Advertisment

தமிழக உளவுத்துறையின் உள்நாட்டுப் பாதுகாப்பு பிரிவின் டி.ஐ.ஜி.யாக இருந்த டாக்டர் கண்ணன் ஐ.பி.எஸ்., கடந்த மார்ச் மாதம் ஐ.ஜி.யாக பதவி உயர்த்தப்பட்டார். பதவி உயர்த்தப்பட்டு உளவுத்துறையின் உள்நாட்டு பாதுகாப்புப் பிரிவிலேயே தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் ஜிகாத் அடிப்படைவாதத்தை ஒழித்ததில் கண்ணன் தலைமையிலான டீம் அதிகாரிகளுக்கு முக்கிய பங்கு உண்டு என கருதிய தமிழக அரசு, அந்த டீம் அதிகாரிகளுக்கு, உளவுத்துறையில் துணிச்சல் மிகுந்த பணிகளுக்கான முதல்வர் விருது வழங்க முடிவு செய்திருக்கிறது.

Advertisment

ccccc

அதன்படி, டாக்டர் கண்ணன் ஐ.பி.எஸ், கியூ பிராஞ்ச் சி.ஐ.டி.யின் எஸ்.பி. மகேஷ் ஐ.பி.எஸ்., எஸ்.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு பிரிவு எஸ்.பி. அரவிந்த், உளவுத்துறையின் கோவை மாவட்ட சிறப்பு புலனாய்வு பிரிவின் டி.எஸ்.பி. பண்டரிநாதன், சென்னை சிறப்பு புலனாய்வு பிரிவின் இன்ஸ்பெக்டர் தாமோதரன் ஆகிய ஐவருக்கும் முதல்வர் பதக்கம் மற்றும் 5 லட்ச ரூபாய் பண முடிப்பும் வழங்கும் அரசாணையை பிறப்பித்திருக்கிறார் தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் ஐ.ஏ.எஸ்!

medal chief minister Officer Intelligence Tamil Nadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe