தமிழ்நாட்டின் பெருமைகளையும்சட்டப்பேரவையின் மாண்புகளையும் சிதைத்துகூட்டாட்சித்தத்துவத்தை சீர்குலைக்கும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிபதவி விலகக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி சார்பில் சைதாப்பேட்டை வேளச்சேரி மெயின்ரோட்டிலிருந்து ஆளுநர்மாளிகை நோக்கியமுற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழ உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் வாசுகி உள்ளிட்ட கட்சித்தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று ஆளுநருக்கு எதிராக முழக்கங்களைஎழுப்பினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.