Skip to main content

“சொத்து வரி உயர்வை தமிழக அரசு உடனே வாபஸ் பெற வேண்டும்..” ஜி.கே. வாசன் 

Published on 09/05/2022 | Edited on 09/05/2022

 

"The Tamil Nadu government should immediately withdraw the property tax increase."  vaasan

 

த.மா.கா மேற்கு மண்டலம் சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியில் 9ந் தேதி காலை நடைபெற்றது. அதற்கு தலைமை வைத்து ஜி.கே. வாசன் பேசும்போது, "திமுக தனது தேர்தல் அறிக்கையில் கரோனா பிரச்சனையிலிருந்து பொது மக்களின் பொருளாதாரம் முழுமையாக மீண்ட பிறகு சொத்து வரி உயர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறியது. ஆனால், தற்போது மத்திய அரசு மீது பழியை சுமத்தி சொத்து வரியை திமுக அரசு 25 சதவீதத்திலிருந்து 150 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு இது பேரிடியாக உள்ளது. வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் வாடகை செலுத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர். 


பொருளாதாரம், தொழில்கள் முழுமையாக மீளவில்லை விலைவாசி உயர்ந்து வருகிறது. வருமானம் பழையபடி இல்லை. எனவே, சொத்து வரி உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு முழுமையாக நிறைவேற்றவில்லை. ஆனால், சொத்து வரியை மட்டும் கடுமையாக உயர்த்தி உள்ளது. திமுக கூட்டணி கட்சிகள் இது குறித்து வாய்திறக்கவில்லை. ஆனால், மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு எதிராக முடியும். 


அதிமுக அரசால் கொண்டு வரப்பட்ட பல திட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன. குறிப்பாக தாலிக்கு தங்கம், பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம், குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம் தருவதாக கூறியது வழங்கவில்லை, கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படவில்லை, மகளிருக்கு பேருந்து இலவச பயணம் அனுமதித்துள்ளது வரவேற்கிறோம். ஆனால், முறையாக பேருந்துகள் நின்று பெண்களை ஏற்றிச் செல்ல வேண்டும். தற்போது நூல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் கொங்கு மண்டலத்தில் ஜவுளித் தொழில் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இதை தீர்க்க வேண்டும். மின் தடை கடுமையாக உள்ளது நமது மாணவ மாணவிகள் படிக்க சிரமப்படுகின்றனர். மத்திய அரசு போதுமான அளவு மின்சாரம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரித்து மக்களின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். 


சட்டம் ஒழுங்கு பாதித்துள்ளது. விசாரணை கைதிகள் காவல் நிலையங்களில் தாக்கப்படுகின்றனர். கொலை கொள்ளை வன்கொடுமை சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ஏன் தூக்கு தண்டனை வழங்கினாலும் தவறில்லை. இதேபோன்று பள்ளிகள் கல்லூரிகளில் தற்பொழுது போதைப் பழக்கத்துக்கு மாணவ மாணவிகள் அடிமையாகும் சூழ்நிலை உள்ளது. போதைப் பொருள் எங்கிருந்து யாரால் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி தடுக்கப்பட வேண்டும். மாணவ மாணவிகளை பாதுகாக்க வேண்டும். டாஸ்மாக் கடைகள் குறைக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு மாறாக புதிதாக கடைகள் உருவாக்கப்படுகின்றன" என்றார். தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் சேகர், மாநில இளைஞரணி தலைவர் ஈரோடு யுவராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தேர்தல் பணியைவிட சிறுத்தையை பிடிப்பதே முதல் பணி'-ஜி.கே.வாசன்

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
'The first task is to catch the leopard rather than the election task' - GK Vasan speech

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இரவில் நடமாடும் சிறுத்தையை பிடிக்கும் பணி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் நகரப் பகுதியில் உள்ள செம்மங்குளத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை வேட்டையாடும் வகையில் சிறுத்தை ஓடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இது குறித்து போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சிறுத்தையின் கால்தடத்தை வைத்து அதன் நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று நாட்களாக அந்த பகுதியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை ஆரோக்கியநாதபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் பாதுகாப்பு கருதி இன்று (04/04/2024) அந்த உள்ள 9  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

சிறுத்தை தேடுதல் வேட்டையில் முதல் நாள் கேமராவில் சிக்கிய அந்த சிறுத்தை இரண்டாவது நாள் சிக்கவில்லை என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியநாதபுரம் பகுதியில் நேற்று இரவு வனத்துறையினர் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பின் தொடர்ந்ததால் சிறுத்தையை கண்டுபிடிக்கும் பணியில் கடும் பாதிப்பு ஏற்பட்டதாகவும், எனவே சிறுத்தையை பிடிக்கும் வரை வனத்துறையினரை பொதுமக்கள் பின் தொடர்ந்து இடையூறு செய்ய வேண்டாம் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை தேடும் பணிக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு கேட்கவும் வனத்துறை முடிவு செய்துள்ளது. கூறைநாடு, செம்மங்குளம், ஆரோக்கியநாதபுரம், சித்தர்காடு என பல இடங்களுக்கு தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருப்பது வனத்துறையினருக்கு அதனை பிடிப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் பொது மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், 'தேர்தல் பணியை விட சிறுத்தையை பிடிப்பதே முக்கியம். ஏனென்றால் வாக்காளர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வைப்பது அரசின் கடமை' என தெரிவித்தார்.

Next Story

த.மா.க தேர்தல் அறிக்கையை வெளியிட்ட ஜி.கே.வாசன் (படங்கள்)

Published on 01/04/2024 | Edited on 01/04/2024

 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில், நேற்று (31-03-24) தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில், தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் குறித்த ஒளிநாடாவை வெளியிட்டு, பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து பேசினார்.