Skip to main content

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அதிகமாக கொள்ளையடிப்பது தமிழக அரசுதான்: ராமதாஸ் பேச்சு

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
petrol



பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அதிகமாக கொள்ளையடிப்பது தமிழக அரசுதான் என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து திண்டிவனம் காந்தி திடலில் பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல்-டீசல் விலை உயர்வை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.
 

பின்னர் ராமதாஸ் பேசுகையில், பாராளுமன்ற தேர்தல் வரும் காரணத்தினால் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
 

பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அதிகமாக கொள்ளையடிப்பது தமிழக அரசுதான். கடந்த ஆண்டு பெட்ரோல், டீசல் விற்பனையில் தமிழக அரசுக்கு ரூ.470 கோடியில் இருந்து ரூ.900 கோடி வரை கிடைத்திருந்தது.


இந்த ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடி கிடைக்கும். மற்ற மாநிலங்களை போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்