Skip to main content

தமிழ்நாடு அரசு  திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் இந்தி கட்டாயம்; எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

Tamil Nadu Government  Film Training Institute Hindi Compulsory; MP Su. Venkatesan question

 

தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்ற இந்தி கட்டாயம் எனக் குறிப்பிட்டுள்ளதற்கு எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள்தொடர்புத் துறை சார்பில் நாளிதழ்களில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்திற்கு கவுரவ விரிவுரையாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கல்வித் தகுதியில் தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிப்பாடங்களில் முதுநிலை அல்லது M.Phil பட்டம் பெற்றவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விளம்பரத்தின் புகைப்படத்தினை தனது ட்விட்டரில் பதிவிட்டு இது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். எம்.பி. சு.வெங்கடேசனின் ட்விட்டர் பதிவில், “தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்பட பயிற்சி நிறுவனத்தின் பகுதி நேர கெளரவ விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் சமஸ்கிருதம் அல்லது ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்றவராக ஏன் இருக்க வேண்டும்? இந்த அறிவிப்பின் மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவை தேர்தல்;தமிழகத்தில் பொது விடுமுறை அறிவிப்பு 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Lok Sabha election; public holiday announced in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி வரும் நிலையில்,தமிழகத்தில் 8 ஆயிரத்து 50 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்றும் 181 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலேயே மதுரை மாவட்டத்தில் அதிகபட்சமாக 511 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் மக்களவை தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

அமித்ஷாவின் தமிழக பயணம் திடீர் ரத்து 

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
 Amit Sh's trip to Tamil Nadu was suddenly canceled

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4ஆம் தேதி (இன்று) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில் தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்த அமித்ஷா மதுரை மற்றும் சிவகங்கை, கன்னியாகுமரி, தென்காசி தொகுதிகளில் ரோட் ஷோ மற்றும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில தவிர்க்க முடியாத காரணத்தால் அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.