தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றம்?

Tamil Nadu Congress Committee Chairman Change

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட உள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் பதவி வகித்து வருகிறார். 5 ஆண்டுக் காலம் இந்தப் பதவியில் உள்ள கே.எஸ். அழகிரி மாற்றப்பட்டு அதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாக உள்ளதாகத்தகவல் வெளியாகி உள்ளது. புதியதாகத்தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராகத்தமிழகத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்களின் பெயர்கள் டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் பரிசீலனையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதே சமயம் தமிழகச் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித்தலைவர் பதவியிலும்மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

congress
இதையும் படியுங்கள்
Subscribe