Advertisment

பியூஷ் கோயலுக்கு தமிழக முதல்வர் கடிதம்!

 Tamil Nadu Chief Minister's letter to Piyush Goyal!

Advertisment

பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்தக்கோரி மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

நூல் விலையைக் குறைக்கக்கோரி ஜவுளித் தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களாகவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நூல் விலையைக் குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பருத்தி மற்றும் நூல் விலையைக் கட்டுப்படுத்தக் கோரி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஊக வணிகத்தை தவிர்க்க ஏதுவாக விதிக்கப்படும் 11 சதவீத இறக்குமதி வரியை நீக்க வேண்டும். குறைந்தபட்சம் 500 பருத்தி பேரல்கள் போதுமானது என்ற வகையில் வணிக விதி நிபந்தனையைச் சீரமைக்க வேண்டும் என கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

TNGovernment piyushgoyal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe