Advertisment

மோடியை வழிமறித்த விவகாரம்: போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக பாஜகவினர்! (படங்கள்)

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 5ஆம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி அங்கு சென்றிருந்தார். அப்போது பிரதமர் சென்ற வழியில், போராட்டக்காரர்கள் சாலைகளை மறித்தனர். இந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பிரதமரின் பயணத்தில் திட்டமிட்டே பாதுகாப்பு குளறுபடிகளை ஏற்படுத்தியதாகபஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசைக் குற்றம் சாட்டுகிறது தமிழக பாஜக.

Advertisment

இதனையடுத்து, பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டித்து சென்னையில் பட்டினப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று தமிழக பாஜகவின் முன்னாள் தலைவரும் முன்னாள் மத்திய இணையமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்தது.

Advertisment

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கோவை சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, சென்னை மாநகராட்சி தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன், மாநில மீனவர் அணித் தலைவர் சதீஷ்குமார் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

pm modi Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe