Skip to main content

த.மா.கா.-வில் இருந்து விலகிய கோவை தங்கம் சுயேட்சையாகப் போட்டி?

Published on 17/03/2021 | Edited on 17/03/2021

 

tamil maanila congress party leader kovai thangam

 

கடந்த 2016- ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 'இரட்டை இலை'யில் நிற்கச் சொன்னதற்காக, அதிமுக கூட்டணியை விட்டு விலகி மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தவர் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். ஆனால், 2021 சட்டமன்றத் தேர்தலில் 06 இடங்களில் நிற்பதற்குச் சம்மதம் தெரிவித்த வாசன், இரட்டை இல்லை சின்னத்தில் நிற்பதற்கும் 'ஒகே' சொன்னார். இதனால், கட்சிக்குள் அதிருப்திக் குரல்கள் எழுந்தது. கேட்ட தொகுதிகளும் கிடைக்கவில்லை வாசனின் தீவிர ஆதரவாளரான கோவை தங்கத்துக்காக கேட்கப்பட்ட 'வால்பாறை' (கோவை மாவட்டம்) தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை. வால்பாறை தொகுதி நமக்கு ஒதுக்கப்படாததற்கு அமைச்சர் வேலுமணிதான் காரணம், ஆகையால் நீங்கள் சுயேட்சையாகப் போட்டியிடுங்கள் என வலியுறுத்தியுள்ளனர் தங்கத்தின் ஆதரவாளர்கள்.

 

இந்நிலையில், இன்று (17.03.2021) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த கோவை தங்கம், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறேன் என அதிரடியாக அறிவித்துள்ளார். இந்நிலையில், கோவை தங்கம், வால்பாறையில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது.

 

இன்று (17.03.2021) வெளியான 'நக்கீரன்' இதழில், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனின் தீவிர விசுவாசியான கோவை தங்கத்தை அவரின் ஆதரவாளர்கள், வால்பாறை தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட வலியுறுத்துவதாக செய்தி வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க.வுடன் த.மா.கா. கூட்டணி!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
tmk with BJP Alliance

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்திய தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இத்தகைய சூழலில் அ.தி.மு.க. -  பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணியை உருவாக்கும் முயற்சி தீவிரமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசனிடம் செய்தியாளர்கள் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே மீண்டும் கூட்டணி அமைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினீர்களா என்று கேள்வி எழுப்பி இருந்தனர். அதற்கு அவர்,“ 15 நாட்களுக்கு முன்பே ஒரு முறை எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினேன். எடப்பாடி பழனிசாமியை சந்தித்த போது அ.தி.மு.க. - தா.மா.க. கூட்டணிக்காக பேசாவிட்டாலும், நாட்டு நலன், எதிரிகளை வீழ்த்துவது குறித்து பேசினேன் என்று கூறுவதில் இருந்தே புரிந்து கொள்ளுங்கள். எதிரியை வீழ்த்த பலமான கூட்டணி தேவை என்று எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தினேன். அ.தி.மு.க. -  பா.ஜ.க. கூட்டணி முறிந்த பிறகு இரண்டு கட்சிகளும் இணைய வேண்டும் எனவும், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி சேர்ந்தால் தான் தி.மு.க. கூட்டணியை எதிர்கொள்ள முடியும் எனவும் த.மா.கா. கூறிவருகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அ.தி.மு.க.வை - பா.ஜ.க. கூட்டணியில் இணைக்க ஜி.கே.வாசன் மேற்கொண்ட முயற்சிகள் கைகூடாத நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. -  தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி உறுதியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பா.ஜ.க. கூட்டணியில் ஏற்கெனவே இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதிக் கட்சி ஆகியவை இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கர்நாடக தேர்தல்; தலைமைக்கு அதிர்ச்சி தந்த பாஜக எம்எல்ஏ!

Published on 31/03/2023 | Edited on 31/03/2023

 

karnataka bjp mla gopala krishna resins issue

 

கர்நாடக சட்டமன்றத்திற்கான ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. மொத்தமுள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே மாதம் 10 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கர்நாடகா மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனைத் தொடர்ந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அரசியல் கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை வேகப்படுத்தியுள்ளனர்.

 

பாஜகவை சேர்ந்த குட்லிகி தொகுதி எம்எல்ஏ என் ஒய்.கோபாலகிருஷ்ணா தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். மேலும் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் கடந்த 2018 தேர்தலின்போது காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் சேர்ந்து  குட்லிகி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். இந்நிலையில் இன்று கோபாலகிருஷ்ணா, சபாநாயகர் விஸ்வேஷ்வர் ஹெக்டே காகேரியை அவரது அலுவலகத்தில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். இதற்கு முன்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியது குறிப்பிடத்தக்கது.

 

கோபாலகிருஷ்ணா சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள மொலகல்முரு சட்டமன்றத் தொகுதியிலிருந்து 1997, 1999, 2004 மற்றும் 2008 என நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த அரகல்கூடு தொகுதி எம்எல்ஏ ஏ.டி.ராமசாமி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். ஒரே நாளில் அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.