tamil maanil congress party candidates list

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (12/03/2021) தொடங்கியுள்ள நிலையில், தங்களது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.

Advertisment

அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, 6 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்த தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

Advertisment

tamil maanil congress party candidates list

இந்த நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும், 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சித்தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். அதன்படி, திரு.வி.க. நகர் (தனி) சட்டமன்றத் தொகுதி- கல்யாணி, ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதி- யுவராஜா, லால்குடி சட்டமன்றத் தொகுதி- தர்மராஜ், பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி- ரங்கராஜன், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி- விஜயசீலன், கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி- ஜூட் தேவ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.