Advertisment

இந்த நாட்டின் விரோதிகள் இவர்கள் தான்... இயக்குனர் பா.ரஞ்சித் அதிரடி ட்வீட்! 

மக்களவையில் குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். அதன் பிறகு மசோதா மீதான விவாதம் நடந்தது. அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அமித்ஷா, அரசியல் சாசனத்தை விரோதமாக குடியுரிமை சட்டத்திருத்த மசோதா இயற்றப்படவில்லை என்று கூறினார். சுமார் ஒன்பது மணி நேரம் நீடித்த நீண்ட விவாதத்திற்கு பின் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த திருத்தங்கள் மீது வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் குடியுரிமை சட்டதிருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 311 உறுப்பினர்களும், எதிராக 80 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், திமுக, சிவசேனா, திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Advertisment

director

Advertisment

இந்த நிலையில் இந்த மசோதா குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், சிறுபான்மையினரின் நலன்களை பாதுகாக்கும் விதிகளுக்கு எதிராக இருக்கும் எந்த இந்தியனும் இந்நாட்டின் நண்பனாகவோ, ஜனநாயகவாதியாகவோ இருக்க முடியாது. அவன் இந்நாட்டின் விரோதி ஆவான்.இந்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்க்கட்சிகள் பலரும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். மக்கள் மத்தியில் இந்த மசோதாவிற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி வருவது பெரும் பரபரப்பாகியுள்ளது.

politics amithsha pa.ranjith director
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe