Advertisment

அய்யோ என்ன கொடுமைடா... தீண்டாமை சுவரால் பறிபோன 17 உயிர்கள்... கொந்தளித்த இயக்குனர் பா.ரஞ்சித்!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அடுத்த நடூர் பகுதியில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து வீட்டின் மேல் விழுந்தது. இந்த விபத்தில் வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கு காரணமான சுற்றுச்சுவர் இருந்த வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் சுற்றுச்சுவர் வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் தெரிந்தே மரணம் ஏற்படுத்தியதாக வழக்கு பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் அடிப்படையில் 304(a)பிரிவின் கீழ் அஜாக்கிரதையாக மரணம் விளைவித்ததாக முதலில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த பிரிவை மாற்றி 304(2) என்ற பிரிவின் கீழ் தெரிந்தே மரணம் என்று வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

Advertisment

subramaniyan

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கோவை மேட்டுபாளையம் நடூரில் பட்டியலின மக்கள் வாழும் பகுதியை ஓட்டி சாதி உணர்வால் கட்ட பட்ட 20 அடி சுவர் தொடர் மழையால் இடிந்து 17 பேர்பலி. எத்தனையோ முறை இந்த சுவரை அகற்ற சொல்லி முறையிட்டும், அதை தட்டி கழித்து அரசும் சாதியாளர்களும் நிகழ்த்திருக்கும் கொடூர செயல். மேலும் போராட்டம் செய்த தமிழ்ப்புலிகள் தலைவர் நாகை திருவள்ளுவன் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினர் அடித்து இழுத்துச் சென்று விட்டார்கள். சுவர் கொன்ற 17 உடல்களை புதைத்தும் விட்டார்கள். இனி நிவாரணம் கேட்டு போராட வேண்டும்.

Advertisment

ranjith

அவ்வளவு தான்...அடுத்த இறப்பு வரும் வரை காத்திருப்போம் என்றும், அதிக மழையைக் கண்டு அச்சம் அடைந்த மக்கள், மூன்று நாட்களுக்கு முன்புகூட சுவர் பாதிப்பு ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். சுவர் கொண்ட வீட்டு உரிமையாளரிடம் முறையிட்டு இருக்கிறார்கள். அவர்களின் அலட்சயத்தின் விலை 17 உயிர்கள்.தனித் தொகுதியில் நின்று அரசியல் அதிகாரத்தை அடைந்தவர்கள்.. தற்போது இறந்து போன 17 தலித்துகளின் இறப்பிற்கேனும் நீதி கேட்டு ஒன்றிணைவீர்களா என மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு நீதி என்பது நிவாரணம் அல்ல.. சாதிப்பிரிவினையின் சான்றாக 17 பேரை கொன்ற சுவர் போல இனி எங்கும் சுவர்கள் இருக்கக்கூடாது என்கிற உத்திரவாதம் தேவை. ஒடுக்கப்பட்ட மக்களின் விரல் மையினால் ஆட்சியில் அமர்ந்து கொண்டிருப்பவர்களே.. உங்களின் கள்ள மௌனம் அவர்களை இன்னொரு முறை கொன்று கொண்டிருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

politics public issues Coimbatore pa.ranjith director
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe