நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. இருந்தாலும் தமிழகத்தில் அதிமுக, பாஜக கூட்டணி தேனி தொகுதியை தவிர போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை சந்தித்தது. பாஜக போட்டியிட்ட நான்கு தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பாஜக தலைமைக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து வரும் தேர்தல்களில் பாஜகவை வலுப்படுத்த தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கையில் பாஜக பொறுப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisment

actress

இந்த பொறுப்பில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை, எஸ்.வி.சேகர் மற்றும் சில பாஜக பொறுப்பாளர்கள் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாஜகவில் ஒரு சில முக்கிய பிரபலங்களையும் இணைக்கும் முயற்சியிலும் இறங்கி இருப்பதாக செய்திகள் வருகின்றன. இந்த நிலையில் ரஜினி இயக்கத்தில் வெளி வந்த வள்ளி படத்தில் நடித்த பிரியா ராமன் பாஜகவில் இணைய போகிறார் என்ற செய்து வந்துகொண்டிருக்கிறது. அதனை தொடர்ந்து மேலும் சில சினிமா பிரபலங்கள் பாஜகவில் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.