விரைவில் அதர்மத்தை அடியோடு அகற்றி, வெற்றிகளைக் குவிப்போம்... டிடிவி தினகரன் அறிக்கை

T. T. V. Dhinakaran

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளரும், ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அதில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், அதர்மம் புரிவோரை அகற்றி, தர்மத்தை நிலைநாட்டி, அறம் தழைத்தோங்கிடச் செய்வதற்காக கிருஷ்ண பகவான் அவதரித்த திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் இதயம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறப்பு வாய்ந்த இந்த நன்னாளில் கிருஷ்ணர் தங்கள் வீட்டிற்கு நேரில் வருதாக மாக்கோலமிட்டு, அவருக்கு பிடித்தமான உணவுப் பண்டங்களைச் செய்து வைத்து, படையலிட்டு மக்கள் கொண்டாடுகிறார்கள்.

எத்தனை துன்பங்கள் வந்தாலும் கிருஷ்ணர் உடனிருந்து காத்திடுவார். பகையையும், துரோகத்தையும் எதிர்த்து வெல்கிற ஆற்றலைத் தந்திடுவார் என்ற அவர்களின் நம்பிக்கை மெய்யாகிட இந்நாளில் வேண்டிடுவோம். இந்த நெருக்கடியான நேரத்தில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டிடுவோம். இயன்றதை செய்து மற்றவர்களுக்கு உதவிடுவோம்.

தெளிந்த தண்ணீரைப் போல, குழப்பமும் தடுமாற்றமும் இல்லாமல் மனதை நிலை நிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால் எடுத்த செயலில் வெற்றி பெறலாம் என்ற கிருஷ்ணிரின் கீதை உபதேசத்தை நெஞ்சில் நிறுத்தி வெற்றிகளைக் குவிப்போம். விரைவில் அதர்மத்தை அடியோடு அகற்றி, தர்மம் செழித்திடுவதற்கும், சத்தியத்தையும், அன்பையும் நிலைத்திடச் செய்வதற்கும் கிருஷ்ணர் அவதரித்த திருநாளில் உறுதியேற்றிடுவோம். இவ்வாறு கூறியுள்ளார்.

ammk T. T. V. Dhinakaran
இதையும் படியுங்கள்
Subscribe