கரூர் நாடாளுமன்றத் தொகுதி அமமுக வேட்பாளர் என்.தங்கவேலை ஆதரித்து அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பிரச்சாரம் செய்தார்.
அப்போது, எச்.ராஜாவிடம் கஜா புயல் பாதிப்பின்போது பிரதமர் மோடி ஏன் வரவில்லை என்று கேட்டால் தமிழக மக்கள் மோடிக்கு எங்கே வாக்களித்தார்கள் என்று சொன்னது நமக்கெல்லாம் நினைவில் இருக்கிறது. அந்த அளவுக்கு ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் திமிராக பேசுகிறார்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ttvd 33.jpg)
மோடி உதவி செய்வதால் தமிழகத்தில் ஆட்சியை பழனிசாமி அண்ட் கம்பெனி தொடர்கிறது. முற்பகல் செய்யின் பிற்பகல்தானே வரும் என்பதுபோல, கெடுவான் கேடு நினைப்பான் என்பது போல பழனிச்சாமியும், அவரது கம்பெனியும் இன்றைக்கு இடைத்தேர்தலிலே மாட்டிக்கொண்டார்கள்.
இடைத்தேர்தலில் எட்டு தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால் தானாகவே இந்த ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். தமிழகம் முழுவதும் அமமுக தான் வேட்பாளர்களை இன்றைக்கு நிறுத்தியுள்ளது. மற்ற கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தக்கூட அச்சப்படுகிறது. காரணம். அவர்களுக்கு தமிழக மக்கள் மீது நம்பிக்கை இல்லை. இவ்வாறு பேசினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)