ADVERTISEMENT

நாங்க சின்ன கட்சிங்க... மெகா கூட்டணியெல்லாம் எங்களால் அமைக்க முடியாது... டிடிவி தினகரன்

04:44 PM Mar 12, 2019 | rajavel

ADVERTISEMENT

சென்னை அசோக் நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும். ஆர்.கே.நகரில் எப்படி உற்சாகமாக வேலை பார்த்தோமோ அதைப்போலவே 40 தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடக்க உள்ள தொகுதிகளிலும் வேலை பார்க்க வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

ADVERTISEMENT


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன்,

நாடாளுமன்றத் தேர்தல், மினி சட்டமன்றத் தேர்தல் வருவதால் அதுகுறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினோம். எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் மட்டும்டதான் கூட்டணி வைத்துள்ளோம்.

வேட்பாளர்கள் பட்டியல் எப்போது வெளியிடப்படும்?

கலந்து பேசிக்கொண்டிருக்கிறோம். வெளியிடும்போது சொல்லுவோம். நாங்க சின்ன கட்சிங்க. மெகா கூட்டணி, பயில்வான் கூட்டணி, பெரிய பெரிய கூட்டணியெல்லாம் இருக்கு. அதைவிட்டுவிட்டு இங்க வந்து கேட்கிறீர்கள்.

18 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு உள்ளதா?

வேட்பாளர் பட்டியல் வரும்போது பாருங்கள். நீங்க என்ன எங்களை பெருசா எடுத்துக்குறீங்க. தொலைக்காட்சிகளையெல்லாம் பார்க்கிறேன். எங்களை ஒரு பொருட்டாக நினைக்கலை. இன்னைக்கு வந்து அதிசயமாக கேட்கிறீங்க. தேர்தல் முடிந்தவுடன் பாருங்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகிறது என்று கூறப்படுகிறதே?

தேர்தல் ஆணையமே நினைத்தாலும் முடியாத அளவுக்கு தேர்தல் வந்துவிட்டது. இடைத்தேர்தலை தள்ளிப்போடலாம் என்று பகிரங்க முயற்சியெல்லாம் செய்தார்கள். மத்தியில் இருக்கும் ஆட்சியும், மாநிலத்தில் இருக்கும் ஆட்சியும் கூட்டணி வைத்திருக்கிறது. மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றார்.‘

மேலும் பேசிய அவர், இன்று அவர்கள் எப்படி கூட்டணி அமைத்திருக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். அதுபோன்ற மெகா கூட்டணியெல்லாம் எங்களால் அமைக்க முடியாது. நாங்கள் மக்களை சந்திக்கணும், தொண்டர்களுக்கு பதில் சொல்லணும், பக்கத்து வீட்டுக்காரருக்கு, எழுத்த வீட்டுக்காரருக்கு பதில் சொல்லணும். இந்த மாதிரி நாங்க கூட்டணி அமைத்தால் விட்ருவீங்களா? தேர்தலுக்கு தேர்தல் மக்கள் புதுக்கணக்கு எழுதுவார்கள். இவ்வாறு கூறினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT