18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்றும், சபாநாயகர் முடிவில் தவறு இல்லை என்றும், தகுதிநீக்கம் சட்டவிரோதமானது இல்லை எனவும் என்று சென்னை உயர்நிதிமன்ற நீதிபதி எம்.சத்தியநாராயணன் தீர்ப்பளித்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன்,
அரசியலில் பின்னடைவு என்பதே கிடையாது. இது ஒரு அனுபவம்தான். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துவோம்.மேல்முறையீடு செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டால் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேவையில்லை, இடைத்தேர்தல் சந்திக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டால் இடைத்தேர்தலை சந்திப்போம். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவிடம் ஆலோசனை செய்துவிட்டு அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றார்.