Advertisment

அப்பா சம்பாதித்த சொத்தை பிள்ளை அழிப்பான், அதுபோல...- டி. ராஜேந்தர்....

டி. ராஜேந்தரின் லட்சிய திமுக கட்சியின் மக்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் விருப்ப மனு பெரும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

Advertisment

tr

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டி . ராஜேந்தர், "அப்பா சம்பாதித்த சொத்தை பிள்ளை அழிப்பான், அதுபோலத்தான் ஜெயலலிதா வென்று தந்த இந்த ஆட்சியை மக்களை சந்திக்காத இந்த அரசு இன்று ஆட்சி செய்து வருகிறது. லட்சிய திமுக -வின் குறிக்கோள் சட்டமன்றத் தேர்தல் தான், ஆனால் மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தியதன் அடிப்படையிலேயே வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கான வேட்பாளர் மனு வாங்கும் நிகழ்வும் ஆரம்பமாகியிருக்கிறது. மேலும் அதிமுக சார்பில் என்னுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுகவினர் என்னிடம் கூட்டணி குறித்து பேசினர், மேலும் இரட்டை இலை சின்னத்தில் எங்கள் கட்சியினர் போட்டியிட வேண்டும் எனக் கூறினர். அதனை என்னால் ஏற்க முடியவில்லை அதனால்தான் கூட்டணி சேரவில்லை எனக் கூறினார்.

Advertisment

admk t rajender
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe