Advertisment

''சிஸ்டமே ரொம்ப மோசமாக இருக்கிறது...''- ரஜினி ரசிகர்கள் முன்னிலையில் அண்ணாமலை பேச்சு   

bjp

இன்று ரஜினி ரசிகர் மன்றத்தினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டபாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில் ''சூப்பர் ஸ்டார் என்பது ஒரு படம் நடித்து அந்த படத்திற்கு வரக்கூடிய 500 கோடி ரூபாய், ஆயிரம் கோடி ரூபாயை வைத்து கொடுக்கப்படும் பட்டம் கிடையாது. அந்த மனிதனுடைய மனிதத்தன்மையைப் பார்த்து மக்கள் கொடுப்பதுதான் 'சூப்பர் ஸ்டார்' பட்டம். எப்பொழுதும் ரஜினி சாருக்கும் மட்டும்தான் அந்த பட்டம் பொருந்தும். வேறுயாருக்கும் அந்த பட்டம் பொருந்தாது. நடிகர் என்பதை தாண்டி மனிதனாக, ஒரு பண்பாளன், தேசியத்தை நேசிக்கக் கூடியவர் எல்லாவற்றுக்கும் மேலாக தனிப்பட்ட ஒழுக்கம்.

Advertisment

அதையெல்லாம் தாண்டி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம். அதையெல்லாம் தாண்டி எண்ணம், சொல், செயல் என்ற மூன்றிலும் ஆன்மீகப் பாதையில் பயணம் செய்யக்கூடிய பண்பு மிக்கவர். இந்த காலத்தில் ஒரு சின்ன பொறுப்புக்கே அடித்துக்கொள்ளக்கூடிய இந்த உலகத்தில் நாற்காலி தயாராக இருந்தும்கூட அதை வேண்டாம் என்று சொன்ன பண்பு. அதற்காக மட்டும் தான் ரஜினி சாருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் பொருந்தும். அப்படி ஒரு அற்புதமான ரஜினி மன்றத்திலிருந்து, கட்டுக்கோப்பான மன்றத்திலிருந்து இன்று பாஜகவில் நீங்கள் இணைந்திருப்பது எங்களுக்கு ஒரு பெருமை. வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் தேவையில்லை. இந்த சிஸ்டமே ரொம்ப மோசமாக இருக்கிறது. கீழே இருந்து மேலே வரை ஒவ்வொரு இடத்திலும் லஞ்சம் என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டு விட்டார்கள். அந்த அளவுக்குத்தான் தமிழகத்தில் லஞ்சத்தினுடைய நிலைமை இருக்கிறது'' என்றார்.

Advertisment

rajinikanth Annamalai
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe