சென்னை, சாலிகிராமம் பகுதியிலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில் தான் இளையராஜாவின் ரெக்கார்டிங் நடந்து வந்தது. ஒரு கட்டத்தில் இளையராஜா – பிரசாத் ஸ்டூடியோ தரப்பினருக்கிடையே பிரச்சனை உண்டானது. இதனால், இளையராஜாவின் ரெக்கார்டிங்கிற்கு அங்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதன் பின்பு இரு தரப்பினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்று சொல்லப்படுகிறது. பின்பு இளையராஜாவிற்கு ஆதரவாக பாரதிராஜா, ரமேஷ் கண்ணா, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்த முயன்றனர்.

bjp

Advertisment

Advertisment

இதனையடுத்து தான் புதியதாக இசையமைக்கும் தமிழரசன் படத்துக்கு தனது வீட்டிலேயே 20க்கும் மேற்பட்ட இசை கலைஞர்களை வைத்து பின்னணி இசை அமைத்துள்ளார். இது குறித்து நடிகரும், அரசியல்வாதியுமான எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "மிகச்சிறந்த முடிவு. இளய ராஜாவின் பாடல்களின் வெற்றி அவரின் விரல்களில்தான் உள்ளது பிரச்சாத் ஸ்டூடியோவில் அல்ல. 100 ஆண்டுகள் இசைச்சக்ரவர்த்தியாக வாழ வாழ்த்துக்கள்" என்று கூறியுள்ளார்.