Advertisment

'பிக் பாஸ்' கவினை கடுமையாக விமர்சித்த எஸ்.வி சேகர்... எதற்காக தெரியுமா..?

பிரபலங்கள், அரசியல்வாதிகள், நடிகர்கள் என்று பொதுவெளியில் எதையாவது பேசி சர்ச்சைகளில் சிக்கிகொள்வது என்பது சிலருக்கு எப்போதாவது நடக்கும். ஆனால், வாயை திறந்தாலே சர்ச்சைகளில் சிக்கிக்கொள்பவர் ஒருவர் உண்டென்றால் அது எஸ்.வி சேகர் தான். பத்திரிக்கையாளர்களை விமர்சனம் செய்த விவகாரத்தில் படாதபாடுபட்ட காரணத்தால் சில காலம் அமைதியாக இருந்த அவர், தற்போது மீண்டும் கோதாவில் குதித்துள்ளார். அரசியல்வாதிகளை குறிப்பாக திமுகவை அதிகம் விமர்சனம் செய்துவந்த அவர், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்போரை விமர்சித்துள்ளார்.

Advertisment

n

பிக்பாஸ் போட்டியாளர்கள் இருவரின் செயல்பாடுகள் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக அவர் கருத்தை பதிவிட்டுள்ளார். அதில் கவினை பற்றி கூறும்போது, " நல்ல வேளை கவின் ஒலிம்பிக் போன்ற போட்டிகளுக்கு போகலை. மத்த நாட்டுகாரங்க ஜெயிச்சா அவங்களுக்கு பெருமைன்னு உளரிகிட்டே Loss ஓட ஓரமா உக்காந்து கடலை விவசாயம் பார்த்திருப்பார். HORRIBLE" என்று தெரிவித்துள்ளார். மற்றொரு டுவிட்டில் செரீனை பாராட்டுவது போன்று ஒரு டுவிட்டை பதிவிட்டுள்ளார். அதில், " ஒட்டு மொத்த விளையாட்டார்களில் இது விளயாட்டு, வாழ்க்கையுடன் இதை குழப்பிக்கொண்டு அசிங்கப்படாமல் மிகத்தெளிவாக இருப்பவர் ஷெரின் மட்டுமே" என்று தெரிவித்துள்ளார்.

SV Seker
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe