Skip to main content

“சசிகலா உடல்நிலை மோசமானதற்கு பின்னணியில் சதி இருப்பதாகத் தோன்றுகிறது” - ஜவாஹிருல்லா 

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

"Suspicion arises that there is a conspiracy to make Sasikala's health worse ..." - Jawaharlal Nehru

 

மதுரை, திருப்பரங்குன்றம் தாலுகா அவனியாபுரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தென்கிழக்கு மண்டல பொதுக்குழு மாநாடு அவனியாபுரம் அருகே உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

 

மனித நேய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் இந்தப் பொதுக்குழு மாநாடு நடைபெற்றது. மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலிருந்து 500க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
 

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், மனித நேய மக்கள் கட்சி சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அக்கட்சியினர் 80க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். பொதுக் குழு கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற, வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறுதல், தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய, சமையல் எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

இந்தப் பொதுக்குழு மாநாட்டில் ஜவஹிருல்லா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, "மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்களுக்குக் கூட தகவல்கள் தெரிவிக்காமல் கூட்டங்களை நடத்தக் கூடிய நிலை உள்ளது. அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த புதிய தலைமைச் செயல் அலுவலர் இல்லாமல் நிறைவேற்றப்பட கூடிய நிலையில் உள்ளது. இது எவ்வளவு அவலமான நிலையாக உள்ளது.


மதுரையில் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி இருக்கக் கூடிய நான்கு மாசி வீதிகளில் நடந்து சென்றபோது அங்கு இருக்கக்கூடிய சாலைகள் எல்லாம் பள்ளமும் குழியுமாக உள்ளது. இது போன்ற 14 திட்டங்களில் 5 ஸ்மார்ட் சிட்டி திட்டங்களை மதுரையில் உருவாக்கி அந்த 14 இடங்களும் அரைகுறையாக தான் உள்ளது.

 

இதேபோன்றுதான் மத்திய அரசு கொண்டு வரக்கூடிய பல்வேறு திட்டங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு கேடு செய்யக்கூடிய வகையிலே இருக்கின்றது. அதன் மிகப்பெரிய ஒரு எடுத்துக்காட்டாகத்தான் வேளாண்துறை குறித்த அந்த மூன்று சட்டங்கள் அமைந்திருக்கிறது. மருத்துவக் கல்லூரிகளை நம்முடைய நாட்டில் நடத்த வேண்டும் என்றால் ட்ரஸ்ட், அறக்கட்டளைகள், மெடிக்கல் கவுன்ஸில் ஆஃப் இந்திய எட்டாவது பிரிவு தொடர்பான சட்டங்களும், எட்டாவது பிரிவின் அடிப்படையில் எந்த லாப நோக்கமில்லாத அமைப்புகளால் தான் நடத்த முடியும்.
 

ஆனால், தற்போது மோடி அரசு அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளது. உதாரணமாக, தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளும், யூனிவர்சிட்டி என்று சொல்லக்கூடிய நிகர்நிலை பல்கலைக் கழகத்துடன் இணைந்து மருத்துவக் கல்லூரியாக மாற்றலாம் என்ற ஒரு திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது. 


இதன் மூலமாக ஏழை எளிய மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் படிப்பது பகல் கனவாக உள்ளது. இந்த அரசு, எந்த அளவுக்கு கார்ப்ரேட்டுக்கு இசைவாகச் செயல்படுகின்றது என்பதற்கு இவையெல்லாம் எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. தொடர்ச்சியாகத் தமிழகத்தினுடைய உரிமைகளை எல்லாம் பறிக்கக் கூடிய வகையிலேதான் எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மாறினால்தான் தமிழகத்தினுடைய உரிமை, வழக்கமாக இருக்கக்கூடிய மாநில சுயாட்சி, சமூக நல்லிணக்கம், சமூக நீதி இந்த மூன்றையும் நிலைநாட்ட முடியும். அர்னாப் கோஸ்வாமிக்கு புல்வாமா தாக்குதல் குறித்த செய்தி அளித்தது யார்? அந்த நிறுவனத்தினுடைய தலைவருடன் அவர்கள் செய்த வாட்ஸ்அப் தகவல் பரிமாற்றம் அதை அம்பலப்படுத்தி இருக்கிறது. 

 

இதைச் சாதாரண நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியாது. நிச்சயமாக ஒவ்வொரு அமைச்சரும் ரகசிய காப்புப் பிரமாணம் எடுத்துக் கொண்டுதான் அமைச்சர்களாக இருக்கிறார்கள். கோஸ்வாமிக்கு பாலக்கோட்டில் இன்னும் சில நாட்களில் தாக்குதல் நடத்தப் போகிறார்கள் அதுவும் பாகிஸ்தானில் இருந்து நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கசியவிட்டது யார். அப்படிக் கசியவிட்டவர்கள் நிச்சயமாகத் தேசத் துரோகிகள் தான். 

 

இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். கோஸ்வாமி மீது மட்டுமல்ல, அந்தத் தகவலை கொடுத்தவர்கள் மீதும் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதுதான் நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். 
 

சசிகலா உடல் நிலை குறித்த செய்தி ஐயத்தை எழுப்புகிறது. அவர் பரிபூரணமாகக் குணமடைந்து விடுதலையாக வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருக்கின்றது. ஆனால், பரவலாக அவருடைய அரசியல் வருகை யாருக்கு ஆபத்தாக முடியும் என்றால் பா.ஜ.க.வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் ஆபத்தாக முடியும். எனவே இதில் ஒரு சதி இருப்பது போல சந்தேகம் வலுவாக எழுகின்றன. 
 

எடப்பாடி பழனிசாமி, தலைமையில் அ.தி.மு.க. அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை, மோடி அரசுடன் கூட்டுச் சதி செய்து வருகின்றார் என்பதுதான் எதார்த்தமான சூழலாக இருக்கின்றது. தமிழக இளைஞர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் அனைத்தும் பறி போயிருக்கக் கூடிய ஒரு சூழலைப் பார்க்கின்றோம். எனவே நாங்கள் வேலை வாய்ப்புகளை தமிழக மக்களுக்கு உருவாக்கி இருக்கிறோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்வது உண்மைக்குப் புறம்பானதாக இருக்கின்றது. 


தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும். மாநில மக்களுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.  அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் இழந்துவிட்ட பல்வேறு உரிமைகள் எல்லாம் மீட்கப்பட வேண்டும். எங்களுடைய அணி வெற்றிபெறும். கூட்டணி மற்றும் தொகுதிகள் குறித்து தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பேச்சுவார்த்தை நடைபெறும்.

 

பா.ஜ.க. கட்சி சிறுபான்மையினர் நலனுக்கு எதிராகத் தான் உள்ளது. 1957ல் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்ட முறையைப் பின்பற்றித்தான் தற்போதைய பா.ஜ.க.வின் புதிய கல்விக் கொள்கை திட்டம் உள்ளது. பா.ஜ.க.வின் எந்த ஒரு செயலும் சிறுபான்மை நலனுக்கு எதிராகத் தான் உள்ளது” என ஜவாஹிருல்லா கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மோடியின் வெறுப்பு பிரச்சாரம்; ஆக்சன் எடுக்குமா தேர்தல் ஆணையம்?- ஜவாஹிருல்லா

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Jawahirullah said Election Commission should take action against Modi hate campaign

இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் அனல் கக்கும் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி தனது பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலை உமிழ்வதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா எம். எல்.ஏ, "ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி,  தனது பொறுப்பு மிக்க பதவியின் கண்ணியத்தையும் சிறப்பையும் சீர்குலைக்கும் வகையில் நஞ்சைக் கக்கி இருக்கிறார். அவர்கள் (காங்கிரஸ்) ஆட்சியில் இருந்தபோது, தேசத்தின் செல்வத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்குத் தரப் போகிறீர்களா... மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லிம்களுக்குச்செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூடவிட்டுவைக்காது என்றெல்லாம் கேடுகெட்ட ஒரு மூன்றாம் தரப் பேச்சாளரைப் போல ஒரு நாட்டின் பிரதமர் பேசியிருப்பது இந்திய நாட்டையே உலக அரங்கில் வெட்கித்  தலைகுனிய வைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஆட்சி செய்த பிரதமர்கள் யாருமே இது போன்ற தரங்கெட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டதில்லை. தனது பத்தாண்டுக் கால ஆட்சியில் மக்களைக் கவரத்தக்கச் சாதனைகளைப் பேச மோடிக்கு ஏதுமில்லை.  

நாடு முழுவதும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்ற நிலையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மட்ட ரகமான வெறுப்புப் பரப்புரையாளராக மாறியுள்ளார். குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது அவரது உள்ளத்தில் உறைந்திருந்த  சிறுபான்மை மக்களுக்கு எதிரான அதிதீவிர குரோத வெறுப்புணர்வும் கலவர வெறியும் பிரதமரான பிறகும் சற்றும் கரையவில்லை என்பதை அவரது பரப்புரை வெளிப்படுத்தியுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளின் அடிப்படையில் மத வெறுப்பு பரப்புரை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. ஒரு பிரதமராக இவர் தேர்தல் நடத்தை விதிமுறையையும் பின்பற்றவில்லை.

நாட்டின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனத்தின் சாராம்சத்தையும் மதிக்கவில்லை. ஒருபோதும் சிறுபான்மையினருக்கு எதிராக நாங்கள் இல்லை என்று ஊடகத்தில் விளம்பரம் செய்துவிட்டு, அப்பட்டமாக மதவெறுப்பு பரப்புரையை ஒரு பிரதமரே செய்திருப்பது அக்கட்சியின் அருவருப்பான சந்தர்ப்பவாதத்தை மக்களுக்கு உணர்த்தி உள்ளது. பிரதமர் பதவிக்கான கண்ணியத்தைச் சீர்குலைத்துள்ள பிரதமர் மோடிக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுவுநிலையை நிரூபிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இதை இந்தியத்தேர்தல் ஆணையம் மௌனமாகக் கடந்து போனால், அதன் நம்பகத்தன்மை உலக அரங்கில் கேள்விக்குறியாகிவிடும் என்பதையும் கருத்திற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்திடவேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார் ஜவாஹிருல்லா.

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.