நேற்று மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முடிந்த நிலையில், இன்று காலை தொடங்கிய மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு தற்போது நிறைவடைந்துள்ளது. அதேபோல் திருச்சி மாவட்டம் சூரியூரிலும் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற முடிந்தது.நாளை மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்பதற்காக மதுரைக்கு வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மதுரை விமான நிலையத்தில் வரவேற்றனர். அதையடுத்து தீடீரென அழகிரி வீட்டிற்குச் சென்ற உதயநிதி ஸ்டாலின் அழகிரிக்கு பொன்னாடை போர்த்தினார். வெளியே வந்து வரவேற்ற அழகிரி காந்தி, அழகிரி மற்றும் குடும்பத்தினர்உள்ளே வெகு நேரம் பேசிக்கொண்டனர். அப்பொழுது அழகிரி ஆதரவாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/n222984.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/n222981.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/n222982.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-01/n222983.jpg)