Skip to main content

"ஆளுநர் அரசைக் கவிழ்ப்பதில் துரிதமாகச் செயல்படக் கூடாது" - உச்சநீதிமன்றம்

Published on 17/03/2023 | Edited on 17/03/2023

 

supreme court talks about maharashtra state governor action

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் பாஜக, சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து வெற்றி பெற்றன. முதல்வர் பதவியில் இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் வீதம் பகிர்ந்து கொண்டு ஆட்சி செய்ய வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியது. இதற்கு பாஜக மறுப்பு தெரிவித்ததால், கூட்டணியில் இருந்து சிவசேனா விலகியது. மேலும் சிவசேனாவானது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட பிளவால் அக்கட்சியில் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தார்.

 

இது தொடர்பாக இருதரப்பும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு சாசன அமர்வு விசாரணை செய்து வருகிறது. அமர்வானது இந்த வழக்கு பற்றி குறிப்பிடுகையில், "ஆளுநரின் அதிகாரத்தைப் பற்றி நாங்கள் கேள்வி எழுப்பவில்லை. அதே நேரம் ஆளுநர் அரசைக் கவிழ்ப்பதில் துரிதமாகச் செயல்படக் கூடாது. ஆளுநர்கள் இவ்வாறு அரசியலில் ஈடுபடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்த்துவிடும். சிவசேனாவில் உட்கட்சிப் பிரச்சனை எழுந்தபோது முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவின் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அவசரம் காட்டினார். உட்கட்சிப் பிரச்சனைக்கு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வருக்கு ஆளுநர் உத்தரவிட முடியுமா? இவ்வாறு உத்தரவிட ஆளுநருக்கு போதிய ஆதாரங்கள் வேண்டும்" எனத் தெரிவித்தது.

 

இந்நிலையில் தான் நீதிபதிகளின் இந்தக் கருத்தைக் குறிப்பிட்டு உத்தவ் தாக்கரே தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டதை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், "தன்னால் வெற்றி பெற முடியாது எனக் கருதி உத்தவ் தாக்கரே பதவி விலகியதை அடுத்து எப்படி அவரை பதவியில் அமர்த்த முடியும். ஒருவேளை அவர் சட்டமன்றத்தில் பலப்பரீட்சை நடத்தி இருந்தால் கூட ஆளுநரின் உத்தரவை ரத்து செய்வது பற்றி நாங்கள் முடிவு எடுத்து இருக்க முடியும்" என்றனர்.

 

மகாராஷ்டிரா மாநில அரசியல் நெருக்கடி மீதான விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதியைக் குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“படித்து பட்டம் பெறுவதை விட பஞ்சர் கடை வைக்கலாம்” - பா.ஜ.க எம்.எல்.ஏவின் சர்ச்சை பேச்சு!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
BJP MLA's controversial speech in madhya pradesh

நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்தும் வகையில் ‘பிரதமர் சிறப்புக் கல்லூரி’ என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் நடைபெறும் இந்த திட்டத்தின் கீழ் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பா.ஜ.க எம்.எல் ஏ ஒருவர், மாணவர்களிடம் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

மத்தியப் பிரதேசம் மாநிலம், குணா மாவட்டத்தில் இந்த புதிய கல்லூரியில் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அந்த தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ பன்னாலால் ஷக்யா கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “நாம் இன்று பிரதமர் சிறப்பு கல்லூரியைத் திறக்கிறோம். இந்தக் கல்லூரிப் பட்டங்களால் எதுவும் நடக்கப் போவதில்லை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

அதற்குப் பதிலாக, குறைந்த பட்சம் மோட்டார் சைக்கிளுக்கு பஞ்சர் பார்க்கும் கடையை வைத்தால் உங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும்” என்று கூறினார். பா.ஜ.க எம்.எல்.ஏவின் இந்தச் சர்ச்சை பேச்சுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

ஆளுநருடன் மத்திய அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!

Published on 17/07/2024 | Edited on 17/07/2024
Union Minister Amit Shah consultation with the Governor

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி  5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக ஆளுநர் ஆர். என். ரவி நேற்று (16.07.2024) பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று (17.07.2024) ஆளுநர் ஆர். என். ரவி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து பேசியிருந்தார்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Union Minister Amit Shah consultation with the Governor

இது தொடர்பாக ஆளுநர் மாளிகையின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் ஆளுநர் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழ்நாட்டில் நிலவும் பாதுகாப்பு, அது தொடர்புடைய சூழ்நிலைகள்,  மாநில மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் பாதுகாப்பில் அவை ஏற்படுத்தும் தாக்கங்கள் குறித்து மிகவும் ஆக்கபூர்வ  சந்திப்பை மேற்கொண்டேன்.  நமது மக்களை பாதிக்கும் பிரச்சனைகள் மீது அற்புதமான ஆழ்ந்த பார்வையும் அவர்களின் நல்வாழ்வில் மிகுந்த அக்கறையும் அவருக்கு உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் கட்சித் தலைவர்களின் கொலை சம்பவங்கள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலரும் தமிழகத்தின் சட்ட ஒழுங்கு குறித்து கேள்விகளை எழுப்பி வரும் சூழலில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை ஆளுநர் ஆர். என். ரவி சந்தித்து பேசியுள்ள சம்பவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.