Advertisment

‘கட்சியை எப்படி நடத்துவீங்க?’ - கேள்வியுடன் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

 Supreme Court deferred the verdict aiadmk general assembly case

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அ.தி.முக. நிர்வாகி வைரமுத்து தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

Advertisment

இந்த விவகாரத்தில் அ.தி.மு.க. மற்றும் அக்கட்சியின் இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் அவரது வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்திருந்தார். பல்வேறு கட்ட விசாரணைகளுக்குப் பிறகு இன்று தற்பொழுது மீண்டும் அந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertisment

உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து 5 வதுநாளாக நடைபெற்ற விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தொடர்ந்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தால் எப்படி கட்சியை நிர்வகிப்பீர்கள்என்று கேள்வி எழுப்பினர். இதனைத் தொடர்ந்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.

eps ops admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe