பழனிசாமிக்கு ஆதரவு! திருச்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தீர்மானம்! 

Support for Palanisamy! AIADMK resolution at Trichy consultative meeting!

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு நிர்வாகிகள்ஆலோசனைக்கூட்டம் தில்லை நகரில் நடந்தது. மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான மு.பரஞ்சோதி தலைமை தாங்கினார். மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் என்.ஆர்.சிவபதி, அதிமுக அமைப்புச் செயலாளர் வளர்மதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள்எம்.எல்.ஏபிரிண்ட்ஸ், முன்னாள்எம்.எல்.ஏஇந்திரா காந்தி, ஒன்றிய செயலாளர்கள்முத்துக்கருப்பன், ஜெயக்குமார், பகுதி செயலாளர்கள்சுந்தராஜ்டைமன்திருப்பதி, பொதுக்குழு உறுப்பினர் பிரியா சிவகுமார் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள்திரளாகப்பங்கேற்றனர்.

பின்னர் கட்சியில் எழுந்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில், ஒற்றைத் தலைமையால் மட்டும்தான் திமுக ஆட்சியை வீழ்த்தி மீண்டும் மக்கள் விரும்பும் ஜெயலலிதாவின்ஆட்சியைக்கொண்டு வர முடியும்.அதற்குத்திருச்சி வடக்கு மாவட்ட அதிமுகவின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் அனைத்து தொண்டர்களும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியை ஆதரிப்பதுஎனத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் சேவியர் பொதுக்குழு உறுப்பினர்கள் மல்லிகாசின்னசாமி,ஜெயராம், சரோஜா இளங்கோவன்,தலைமைச்செயற்குழு உறுப்பினர் ராஜாத்தி தியாகராஜன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

admk trichy
இதையும் படியுங்கள்
Subscribe