Skip to main content

கெஜ்ரிவாலுக்கு சம்மன்; கபில் சிபல் காட்டம்

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

Summons Kejriwal; Kapilcipal angry

 

அண்மையில் டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களை அடுத்து, டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிரடியாக கைது செய்தது.

 

இதனைத் தொடர்ந்து, சிசோடியாவின் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தியானத்தில் ஈடுபட்டார்.  முன்னதாக தனது தியானம் குறித்து பேசிய அவர், “மக்களுக்கு தரமான கல்வியையும் மருத்துவத்தையும் கொடுக்க நினைத்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் பிரதமரின் செயல் கவலை அளிக்கிறது” என்றார். மேலும், நாட்டின் நலன் குறித்து தான் கவலைப்படுவதாகவும், அதனால் நாட்டின் நலனுக்காக ஹோலி பண்டிகை அன்று தியானம் இருக்கப்போவதாகவும் கூறியிருந்தார்.

 

தொடர்ந்து, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் நாளை (16/04/2023) அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜர் ஆகிறார்.

 

இந்நிலையில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கபில் சிபல் இது குறித்து கூறும்போது, “2 முதல் 3 முறை கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைப்பார்கள். அரசியல் எதிரிகளை ஒழிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்களைக் குறிவைத்து மோடி அரசு செயல்படுகிறது. அவர்கள் அதை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார்கள். சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோரை குறிவைத்து வருகின்றனர். விசாரணை அமைப்புகளை தூண்டிவிட்டு நெருக்கடி கொடுக்கும் வேலையில் மோடி அரசு ஈடுபட்டு வருகிறது” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரவிந்த் கெஜ்ரிவால் உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
Arvind Kejriwal's aide's house raided by the enforcement department

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், 100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கிறார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார்.

இந்நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமார் வீட்டிலும், ஆம் ஆத்மி கட்சியின் பொருளாளரும், எம்.பி.யுமான குப்தா வீட்டிலும் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் என 12 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் இன்று (06.05.2024) காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Next Story

ஹேமந்த் சோரன் கைது; “உச்சநீதிமன்றமே கேட்க மறுத்தால் எங்கு செல்வது” - கபில் சிபல்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Kapil Sibal says for Hemant Soran arrested in supreme court

ஜார்க்கண்ட் மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன். முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து செயல்படுகிறது. இந்நிலையில் ஹேமந்த் சோரன், சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இது தொடர்பாக அமலாக்கத்துறை, ஹேமந்த் சோரனுக்கு 7 முறை சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு ஆஜராகுமாறு ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. அதற்கு, ராஞ்சியில் உள்ள தனது இல்லத்தில் தன்னிடம் விசாரணை நடத்தலாம் என சோரன் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

அதே சமயம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தும் அமலாக்கத்துறையை கண்டித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர், ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து, விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அவரது அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று (02-02-24) பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஹேமந்த சோரன் தரப்பில் மனு தாக்கல் செய்திருந்தது. அப்போது, ஹேமந்த சோரன் மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றத்துக்கு செல்ல அறிவுறுத்தியது. இதனையடுத்து, ஹேமந்த சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “பாதிக்கப்பட்டவர்களின் முறையீட்டை உச்சநீதிமன்றமே கேட்க மறுத்தால் எங்கு செல்வது? எந்தெந்த வழக்குகளுக்கு உச்சநீதிமன்றத்துக்கு வரலாம். எவற்றுக்கு வரக்கூடாது என்று அறிவித்து விடுங்கள்.

இந்திய வரலாற்றில் பதவியில் இருந்த முதலமைச்சர் கைது செய்யப்பட்டது இதற்கு முன் நடந்ததில்லை. இந்தியாவில் எதிர்க்கட்சி முதலமைச்சர்களே இருக்கக் கூடாது என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க அரசின் நோக்கம். டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், ஹேமந்த சோரனை போல் நடத்த ஒன்றிய பா.ஜ.க அரசு திட்டமிடுகிறது. டெல்லியிலும் பா.ஜ.க அரசை ஏற்படுத்துவதே ஒன்றிய பா.ஜ.க அரசின் நோக்கம். ஹேமந்த் சோரன் சிறையில் இருந்து வெளியே வர முடியாதவாறு மேலும் 10 வழக்குகளை தொடருவார்கள். ஹேமந்த் சோரனை சிறையில் அடைத்துவிட்டு, மக்களவை தேர்தலில் ஆதாயம் பெறுவதே பா.ஜ.க.வின் நோக்கம்” என்று கூறினார்.