Advertisment

திடீர் திருப்பம்... பாஜகவுக்கு ஏமாற்றம்?

Guru son Kanalarasan

Advertisment

மறைந்த பாமக முன்னாள் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான ஜெ.குருவின் மகன் கனலரசன். இவரை பாஜகவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அக்கட்சியினர் தீவிரமாக இருந்தனர். பாஜகவைசேர்ந்த மூத்த தலைவர்களையும் கனலரசன் சந்திக்க ஏற்பாடுகள் செய்தனர். பாஜகவில் அவரை இணைப்பதற்கான முயற்சிகள் நடந்த வந்த நிலையில் தற்போது அதில் தோல்வி ஏற்பட்டுள்ளது.

சென்னை ஆயிரம்விளக்கு பகுதியைச் சேர்ந்த சமூக சேவகரும் வழக்கறிஞருமான இன்சோ.பிரகாஷ், செனடாப் சாலையில் உள்ள திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இல்லத்திற்கு கனலரசனை அழைத்துச் சென்று சந்திக்க ஏற்பாடு செய்தார். அப்போது வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிக்கும் தனது மாவீரன் மஞ்சள் படையின் ஆதரவை அப்போது கனலரசன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆதரவு தெரிவித்தற்காக கனலரசனுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்தார் உதயநிதி ஸ்டாலின். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Kaduvetti guru J.Guru
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe