Sudden reversals ... collapsing OPS ....!

Advertisment

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை தான் என எடப்பாடி பழனிசாமி தரப்பும், இரட்டைத் தலைமை தான் என ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மாறிமாறி அணி திரட்டிக் கொண்டிருக்கும் நிலையில், வரும் ஜூன் 23- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக இபிஎஸ் நியமிக்கப்படுவாராஎன்று நாளை நடக்கவிருக்கும் பொதுக்குழுவில் தெரிந்துவிடும் என்ற பட்சத்தில், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பல்வேறு நிர்வாகிகள் தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ops

இந்நிலையில் ஓபிஎஸ்க்கு இருந்த மாவட்டச்செயலாளர்கள் ஆதரவு எண்ணிக்கை 6 ஆக சரிந்துள்ளது. தொடர்ந்து ஓபிஎஸ்ஸை ஆதரித்து வந்த தென்சென்னை தெற்கு கிழக்கு மாவட்டச் செயலாளர் வேளச்சேரி அசோக் திடீரென பல்டியடித்து எடப்பாடிக்கு தனது ஆதரவைத்தெரிவித்துள்ளார். அதேபோல் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளராக அறியப்பட்ட முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயன் தனது ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு இபிஎஸ்-ஓபிஎஸ் அணிகள் சேர்ந்தபொழுது 'அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை' என ஃபேஸ்புக்கில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பியவர் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயன் என்பது குறிப்பிடத்தக்கது.