தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும், ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. பிரதான கட்சிகளின் தொகுதிப் பங்கீடு, வேட்பாளர்கள் குறித்த முடிவுகள் இறுதி செய்து வெளியிடப்பட்டன. பின்னர் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் மயிலாப்பூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஆர். நடராஜ், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மகாலட்சுமி, திமுக வேட்பாளர் த. வேலு, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா ஆகியோர் மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
மயிலாப்பூரில் அடுத்தடுத்து வேட்பு மனு தாக்கல் செய்த கட்சியினர்...! (படங்கள்)
Advertisment